சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குவிந்த காதல் ஜோடிகள் திணறிய சென்னை போலீஸ்

Added : ஆக 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : முகூர்த்த தேதியில், காதல் ஜோடிகள் காவல் நிலையங்களில் குவிந்ததால், தொடர் விசாரணையில் போலீசார் திணறும் நிலைக்கு ஆளாகினர்.ஆடி மாதம் முடிந்து, ஆவணி முதல் நாள் முகூர்த்த தேதி என்பதால், கோவில்கள் முன் திருமண கோஷ்டியினர் குவிந்தனர். கதவு பூட்டி இருந்த போதிலும், கோவில் வாசல் முன் திருமணங்கள் நடந்தன. திருமணம் செய்து கொள்வோர் மற்றும் அவர்களின் உறவினர்கள் குவிந்ததால்,

சென்னை : முகூர்த்த தேதியில், காதல் ஜோடிகள் காவல் நிலையங்களில் குவிந்ததால், தொடர் விசாரணையில் போலீசார் திணறும் நிலைக்கு ஆளாகினர்.

ஆடி மாதம் முடிந்து, ஆவணி முதல் நாள் முகூர்த்த தேதி என்பதால், கோவில்கள் முன் திருமண கோஷ்டியினர் குவிந்தனர். கதவு பூட்டி இருந்த போதிலும், கோவில் வாசல் முன் திருமணங்கள் நடந்தன. திருமணம் செய்து கொள்வோர் மற்றும் அவர்களின் உறவினர்கள் குவிந்ததால், குன்றத்துார் முருகன் கோவிலில் பெரிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.கோவிலில் தான் இப்படியென்றால்,

முகூர்த்த தேதியில் திருமணம் செய்த காதல் ஜோடிகள் பாதுகாப்பு கோரி, காவல் நிலையங்களிலும் தஞ்சம் அடைந்தனர். சென்னை, கண்ணகி நகரைச் சேர்ந்த 17 வயது மாணவி மாயமானார். இவரது தாய், 'மகளை காணவில்லை' என, போலீசில் புகார் அளித்தார். அடையாறு மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.தொடர் விசாரணையில், மாணவியை, ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சதீஷ் என்ற வாலிபர் காதல் வலை வீசி, வியாசர்பாடியில் உள்ள தன் சகோதரியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது.மாணவியை அந்த வாலிபர் திருமணம் செய்துவிட்டார் எனவும் கூறப்படுகிறது. இருவரும் பாதுகாப்பு கோரி, அடையாறு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

சிறுமிக்கு தொல்லை கொடுத்ததாக, சதீஷை போலீசார் கைது செய்தனர்.இவர்களை போல, முகூர்த்த தேதியில் பாதுகாப்பு கோரி, சென்னை, ஈரோடு என, பல இடங்களில் 15க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகள் காவல் நிலையங்களில் தஞ்சம் அடைந்தனர். இவர்களுக்கு சட்ட ரீதியாக உதவி செய்வது மற்றும் உறவினர்களிடம் பேசுவது, நடவடிக்கை எடுப்பது என, போலீசார் திணறும் நிலைக்கு ஆளாகினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
23-ஆக-202114:24:14 IST Report Abuse
அசோக்ராஜ் பிறந்ததிலிருந்து நாளது தேதி வரை பெற்றோர் செலவு செய்த தொகைக்கு பாண்டு ப்ரோநோட்டு எழுதிக்கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டால் இந்த ரோமியோ ஜூலியட்டுகளுக்கு காதல் வருமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X