சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021
Share
Advertisement
தமிழகத்து நிகழ்வுகள்ஸ்டூடியோவில் கேமராக்கள் திருட்டுகொரட்டூர் : ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டு, கேமராக்கள் திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மாதனாங்குப்பம், கலெக்டர் நகர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், 50. இவர் அதே பகுதி, கடப்பா சாலையில் ஸ்டூடியோ வைத்துள்ளார்.நேற்று முன்தினம், ஸ்டூடியோவை திறக்க சென்றபோது, பூட்டு



தமிழகத்து நிகழ்வுகள்

ஸ்டூடியோவில் கேமராக்கள் திருட்டு

கொரட்டூர் : ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டு, கேமராக்கள் திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மாதனாங்குப்பம், கலெக்டர் நகர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், 50. இவர் அதே பகுதி, கடப்பா சாலையில் ஸ்டூடியோ வைத்துள்ளார்.நேற்று முன்தினம், ஸ்டூடியோவை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு, இரண்டு கேமராக்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு 1 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. இது குறித்து, கொரட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.



latest tamil news




சைக்கிள் திருடியவர் சிக்கினார்

சைதாப்பேட்டை : நந்தனம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன், 47. நேற்று முன்தினம் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது சைக்கிள் திருடுபோனது. இதன் மதிப்பு 12 ஆயிரம் ரூபாய்.சைதாப்பேட்டை போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், பல்லாவரம், கண்ணபிரான் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ்குமார், 48, சைக்கிள் திருடி செல்வது பதிவாகி இருந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


latest tamil news




மனைவி, மகள் மாயம் கணவர் போலீசில் புகார்

கோட்டூர்புரம் : கொரோனா தடுப்பூசி போடுவதற்காக சென்ற மனைவி, மகள் மாயமானதை தொடர்ந்து, போலீசில் கணவர் புகார் அளித்துள்ளார்.

கோட்டூர்புரம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வரதன், 35. அவரது மனைவி வெண்ணிலா, 33. இவர்களுக்கு, பிரியா, 12 என்ற மகள் உள்ளார். நேற்று முன்தினம் காலை வெண்ணிலாவும், பிரியாவும் தடுப்பூசி போடுவதற்காக சென்றனர்.பின் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால்

அச்சமடைந்த வரதன் உறவினர்கள், நண்பர்கள் வீடு என அனைத்து இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.தொடர்ந்து சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

பட்டினம்பாக்கம் : பட்டினம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, 10 சவரன் நகை உள்ளிட்டவை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பட்டினம்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் சாந்தி, 48. இவர், நேற்று முன்தினம் இரவு மந்தைவெளியில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.மேலும், பீரோவில் இருந்த, 10 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் 70 ஆயிரம் ரூபாயை, மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. சம்பவம் குறித்து பட்டினம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண்ணிடம் செயின் பறித்த இருவர் கைது

திருவல்லிக்கேணி : திருவல்லிக்கேணி அருகே, அரசு பெண் ஊழியரிடம் செயின் பறித்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.

பள்ளிக்கரணை, பவானி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி, 53; மாநகர போக்குவரத்து கழக தலைமை அலுவலக ஊழியர். கடந்த 18ம் தேதி பல்லவன் சாலையில் நடந்து சென்ற இவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் மூவர், ௧.௫ சவரன் செயினை பறித்துச் சென்றனர். இது குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்தனர்.இதில், புளியந்தோப்பைச் சேர்ந்த அஜித், 22, சேப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், 19, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள செல்வம் என்பவர் தேடப்பட்டு வருகிறார்; நகை பறிமுதல் செய்யப்பட்டது.

மனைவி கொலை கணவன் சரண்

ஓசூர்-மனைவியை கொன்ற கணவன், போலீசில் சரணடைந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வசிப்பவர் ஜோதிஸ், 36; பைக் மெக்கானிக். இவரது மனைவி வந்தனா, 25; தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளார். மனைவி நடத்தையில் சந்தேகமடைந்த ஜோதிஸ், அடிக்கடி தகராறு செய்தார்.நேற்று முன்தினம் காலை, தகராறு அதிகமாகவே, ஆத்திரமடைந்த ஜோதிஸ், மனைவி கழுத்தை நெரித்து கொலை செய்தார். துர்நாற்றம் வெளியே தெரியாமல் இருக்க, சடலத்தை சுற்றி கற்பூரத்தை போட்டுள்ளார். நேற்று காலை சடலத்திலிருந்து துர்நாற்றம் வரவே பயந்த ஜோதிஸ், ஓசூர் டவுன் போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.

கோயில் உண்டியல் உடைப்பு

காரியாபட்டி---விருதுநகர் மாவட்டம்காரியாபட்டி என்.ஜி.ஓ., நகரில்சக்தி மாரியம்மன் கோயில்உள்ளது.பூஜாரிகள்ஹரஹரசுப்பிரமணியன், ராஜா பூஜையை முடித்து நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்குகோயில்கதவை பூட்டி சென்றனர். காலையில் ராஜாவந்தபோதுகிரில் கேட், உண்டியல் உடைக்கப்பட்டு ரூ.10 ஆயிரம் திருடப்பட்டதும்அங்கிருந்தபூனைகொல்லப்பட்டதும் தெரியவந்தது.காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

 
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X