பைக் மீது கார் மோதி மின்துறை ஊழியர் பலி | Dinamalar

பைக் மீது கார் மோதி மின்துறை ஊழியர் பலி

Added : ஆக 23, 2021
Share
காரைக்கால் : காரைக்காலில் பைக் மீது கார் மோதிய விபத்தில், மின்துறை ஊழியர் பலியானார். இரண்டு பிள்ளைகள் படுகாயம் அடைந்தனர்.காரைக்கால் கோவில்பத்து பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (48); மின் துறையில் ஒயர்மேனாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அருள்மொழி. மகள் சஞ்சிதா(15), மகன் யுவராஜ்(13).சேத்துார் அக்ரஹாரத்தில் புதிதாக கட்டிவரும் வீட்டை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு,

காரைக்கால் : காரைக்காலில் பைக் மீது கார் மோதிய விபத்தில், மின்துறை ஊழியர் பலியானார். இரண்டு பிள்ளைகள் படுகாயம் அடைந்தனர்.காரைக்கால் கோவில்பத்து பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (48); மின் துறையில் ஒயர்மேனாக பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி அருள்மொழி. மகள் சஞ்சிதா(15), மகன் யுவராஜ்(13).சேத்துார் அக்ரஹாரத்தில் புதிதாக கட்டிவரும் வீட்டை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு, சக்திவேல் தனது பிள்ளைகளுடன் பைக்கில் சென்றார்.தென்னங்குடி அருகில் எதிரே வந்த கார் மோதியதில் சக்திவேல், அவரது பிள்ளைகள் சஞ்சிதா, யுவராஜ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.காயம் அடைந்த மூவரையும் மீட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிள்ளைகள் இருவரும் சிகிச்சையில் உள்ளனர்.விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற காரை, பேரளம் போலீசார் மடக்கிப் பிடித்தனர். போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, கார் ஓட்டுனர் மீனாட்சிசுந்தரத்தை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X