பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் சுற்றுலா மையங்கள் திறப்பு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
ஊட்டி:நீலகிரியில் தோட்டக்கலை, சுற்றுலா கழகத்துக்கு சொந்தமான சுற்றுலா மையங்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.கடந்த, 2020 மார்ச் 25 முதல், கொரோனா தொற்று பரவல் காரணமாக, சுற்றுலா மையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பின், சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டு, திறக்கப்பட்டன.மீண்டும் இரண்டாம் அலை பரவியதால், சுற்றுலா தலங்கள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டன. தற்போது பல்வேறு வழிகாட்டு
 ஊட்டியில் சுற்றுலா மையங்கள் திறப்பு

ஊட்டி:நீலகிரியில் தோட்டக்கலை, சுற்றுலா கழகத்துக்கு சொந்தமான சுற்றுலா மையங்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.கடந்த, 2020 மார்ச் 25 முதல், கொரோனா தொற்று பரவல் காரணமாக, சுற்றுலா மையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பின், சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டு, திறக்கப்பட்டன.மீண்டும் இரண்டாம் அலை பரவியதால், சுற்றுலா தலங்கள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டன. தற்போது பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, 122 நாட்களுக்கு பிறகு இன்று( 23ம் தேதி) முதல் தோட்டக்கலை, சுற்றுலா கழகத்துக்கு சொந்தமான சுற்றுலா ஸ்தலங்கள் திறக்கப்படுவதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நீலகிரியில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, குன்னுார் டால்பின் நோஸ், லேம்ஸ்ராக், முதுமலை, தொட்டபெட்டா, உள்ளிட்ட வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு தடை நீடிக்கிறது.வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில்,''வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா ஸ்தலங்கள் திறக்கப்படாது. ஆய்வு கூட்டத்துக்கு பின், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X