பொது செய்தி

தமிழ்நாடு

நகை கடைகள் இன்று 'ஸ்டிரைக்': காலை 11:30 வரை செயல்படாது!

Added : ஆக 23, 2021
Share
Advertisement
சென்னை:புதிய 'ஹால்மார்க்' விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அடையாள வேலை நிறுத்தம் செய்யும் வகையில், தமிழகத்தில் உள்ள 35 ஆயிரம் தங்க நகை கடைகளும், இன்று காலை 9:00 முதல், 11:30 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, சென்னை நகை வணிகர்கள் சங்க தலைவர் உதய் உம்மிடி, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி ஆகியோர்
 நகை கடைகள் இன்று 'ஸ்டிரைக்': காலை 11:30 வரை செயல்படாது!

சென்னை:புதிய 'ஹால்மார்க்' விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அடையாள வேலை நிறுத்தம் செய்யும் வகையில், தமிழகத்தில் உள்ள 35 ஆயிரம் தங்க நகை கடைகளும், இன்று காலை 9:00 முதல், 11:30 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, சென்னை நகை வணிகர்கள் சங்க தலைவர் உதய் உம்மிடி, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி ஆகியோர் கூறியதாவது:இந்திய தர நிர்ணய ஆணையம், நகை கடைகள் வாயிலாக விற்கப்படும் தங்க நகைகளுக்கு, இனி புதிய ஹால்மார்க் தர அடையாள எண் கொண்ட நிரந்தர முத்திரை பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது.நகைகளில் ஹால்மார்க் முத்திரையை எதிர்க்கவில்லை; வரவேற்கிறோம். ஆனால், ஹால்மார்க் அடையாள எண்ணை கொண்டு வர வேண்டும் என்பதைத் தான் எதிர்க்கிறோம்.புதிய தர முத்திரை வழங்கும் வசதி உடைய, நாட்டின் 256 மாவட்டங்களிலும், இனி தங்க நகைகள் விற்பனையின் போது, தர முத்திரை கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. தர முத்திரை வழங்கும் மையங்களில் போதிய வசதியும், சாதனங்களும் இல்லை.இதனால், அவற்றில் ஏற்கனவே 16 கோடி முதல், 18 கோடி எண்ணிக்கையிலான தங்க நகைகள் முடங்கியுள்ளன. தற்போது, ஹால்மார்க் முத்திரை வழங்கும் மையங்களின் திறன் தினமும், 2 லட்சம் நகைகள் மட்டுமே.ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு தேவையான நகைகள் தேக்கமடைந்து, விற்பனைக்கு வராமல் உள்ளன. ஒரு நகை செய்து, ஹால்மார்க் முத்திரை மற்றும் தனி ஹால்மார்க் அடையாள எண் பதிந்து, விற்பனைக்கு கொண்டு வர, ஒன்பது முதல், 12 நாட்களாகும்.இதனால், தங்க நகைகள் தேங்கி, விற்பனை பாதிக்கும்; விலையும் அதிகரிக்கும். ஊழியர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும்.மேலும், புதிய முறையில் நகை வாங்குவோரின் தனி விபரங்களையும் அளிக்க வேண்டி வருவதால், இது, தனிநபர் ரகசியம் காக்கும் உரிமையை மீறுவதோடு, அவர்களின் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கும்.இந்த புதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அடையாள வேலை நிறுத்தமாக, சென்னையில் 7,000 நகை கடைகள் உட்பட, மாநிலம் முழுதும் உள்ள 35 ஆயிரம் நகை கடைகளும், இன்று காலை 9:00 முதல், 11:30 மணி வரை மூடப்படும்.இதற்கு பிறகும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிடில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X