பொது செய்தி

இந்தியா

மீண்டும் களைகட்டியது சிறுவர் ரயில் சேவை

Added : ஆக 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி : தாவரவியல் பூங்காவில் சிறுவர் ரயில் சேவை மீண்டும் களை கட்டத் துவங்கி உள்ளது.புதுச்சேரி, பழைய பஸ் நிலையம் அருகே, தாவர வியல் பூங்கா உள்ளது. அரிய வகை மரங்கள் அமைந்துள்ள இந்த பூங்காவுக்கு தினமும் ஏராளமான உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.தாவரவியல் பூங்காவிற்கு வரும் சிறுவர், சிறுமியர், பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில், சிறிய ரயில்
 மீண்டும் களைகட்டியது சிறுவர் ரயில் சேவை

புதுச்சேரி : தாவரவியல் பூங்காவில் சிறுவர் ரயில் சேவை மீண்டும் களை கட்டத் துவங்கி உள்ளது.புதுச்சேரி, பழைய பஸ் நிலையம் அருகே, தாவர வியல் பூங்கா உள்ளது. அரிய வகை மரங்கள் அமைந்துள்ள இந்த பூங்காவுக்கு தினமும் ஏராளமான உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

தாவரவியல் பூங்காவிற்கு வரும் சிறுவர், சிறுமியர், பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில், சிறிய ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அரசுக்கு வருடத்துக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் கிடைத்து வருகிறது.கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.இந்த நிலையில், தாவரவியல் பூங்காவில் சிறுவர் ரயில் இயக்கம் மீண்டும் களை கட்டத் துவங்கி உள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமானோர் தாவரவியல் பூங்காவில் குவிந்தனர். தங்கள் குழந்தைகளுடன் சிறுவர் ரயிலில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், 'சிறுவர் ரயிலில் அனைத்து பழுதுகளும் நீக்கப்பட்டு, புதுப் பொலிவுடன், இயக்கப்பட்டு வருகிறது' என்றனர்.இங்கு 3 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு ரூ. 5; 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X