திருக்கல்யாண உற்சவம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

திருக்கல்யாண உற்சவம்

Added : ஆக 23, 2021
Share
திருக்கனுார் : செட்டிப்பட்டு பெருமாள் கோவிலில், சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 2ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.காலை 8:00 மணிக்கு விஷ்வக்சேன ஆராதனம், அக்னி பிரதிஷ்டை, மகா சுதர்சன ஹோமம், தன்வந்தரி ஹோமம், மகா லட்சுமி
 திருக்கல்யாண உற்சவம்

திருக்கனுார் : செட்டிப்பட்டு பெருமாள் கோவிலில், சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில், 2ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.காலை 8:00 மணிக்கு விஷ்வக்சேன ஆராதனம், அக்னி பிரதிஷ்டை, மகா சுதர்சன ஹோமம், தன்வந்தரி ஹோமம், மகா லட்சுமி ஹோமம் நடந்தது.மாலை 5:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம், அ.தி.மு.க., நிர்வாகி சுத்துக்கேணி பாஸ்கர், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X