அரசியல் செய்தி

தமிழ்நாடு

சகோதர பாசத்தோடு இருப்போம்!

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கோவை:கோவை ஆர்.எஸ்.புரத்தில், பா.ஜ., சார்பில் ரக் ஷா பந்தன் விழா நடந்தது.விழாவில், கோவை தெற்கு எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேசியதாவது:ரக் ஷாபந்தன் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்கு மற்றொரு பெயர், சகோதர - சகோதரி பாசம் என்பது தான். ராக்கி என்றழைக்கும் வண்ணக்கயிறை சகோதரர்களின் கையில் கட்டிவிட்டால், பாசம், நேசம், அன்பு ஆகியவை வாழ்நாளின் இறுதி வரை தொடரும்.கோவை
 சகோதர பாசத்தோடு இருப்போம்!

கோவை:கோவை ஆர்.எஸ்.புரத்தில், பா.ஜ., சார்பில் ரக் ஷா பந்தன் விழா நடந்தது.விழாவில், கோவை தெற்கு எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேசியதாவது:ரக் ஷாபந்தன் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்கு மற்றொரு பெயர், சகோதர - சகோதரி பாசம் என்பது தான். ராக்கி என்றழைக்கும் வண்ணக்கயிறை சகோதரர்களின் கையில் கட்டிவிட்டால், பாசம், நேசம், அன்பு ஆகியவை வாழ்நாளின் இறுதி வரை தொடரும்.கோவை மக்களோடு கைகோர்த்து, எல்லா வகையிலும், வடமாநில மக்கள் உதவி வருகிறீர்கள்.கொங்கு மண்டலத்தில் பல்வேறு தொழில்களை துவங்கி, தமிழகம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் வடமாநில மக்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். ஜாதி, இனம், மொழி, மதம் ஆகியவற்றை கடந்து அனைவரும் சகோதர பாசத்தோடு இருப் போம். அதற்கு இந்நாளில் உறுதிமொழி ஏற்போம்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், ஒருவருக்கொருவர் ராக்கிக்கட்டி, இனிப்புகளை கொடுத்து, சகோதர பாசத்தை வெளிப்படுத்தினர். பா.ஜ., மாநில இளைஞரணி செயலாளர் பிரீத்தி லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X