கல்லுாரி பேராசிரியர் வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள் கொள்ளை| Dinamalar

கல்லுாரி பேராசிரியர் வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள் கொள்ளை

Added : ஆக 23, 2021
Share
புதுச்சேரி : கல்லுாரி பேராசிரியர் வீட்டின் கதவை உடைத்து, ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, நைனியப்ப பிள்ளை வீதியில் வாடகை வீட்டில் வசிப்பவர் உதயகுமார், 47; மதகடிப்பட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வனிதா,42.இவர் கடந்த 19ம் தேதி அதிகாலை 5.30 மணியளவில், வீட்டு

புதுச்சேரி : கல்லுாரி பேராசிரியர் வீட்டின் கதவை உடைத்து, ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, நைனியப்ப பிள்ளை வீதியில் வாடகை வீட்டில் வசிப்பவர் உதயகுமார், 47; மதகடிப்பட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வனிதா,42.இவர் கடந்த 19ம் தேதி அதிகாலை 5.30 மணியளவில், வீட்டு வாசலில் தண்ணீர் பிடித்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றார். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.பீரோவில் வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 சவரன் தங்க நகைகளை காணவில்லை.

இது குறித்து உதயகுமார் நேற்று முன்தினம் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார்.போலீசார், திருட்டு நடந்த வீட்டினை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.அதில், நள்ளிரவில் முன்பக்க கதவை திறந்து உள்ளே புகுந்த திருடர்கள், வீட்டில் அனைவரும் வேறு அறையில் துாங்கிகொண்டு இருந்த வேளையில், பீரோவை உடைத்து நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது. மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X