பொது செய்தி

இந்தியா

'ஸ்மார்ட் சிட்டி' பணி துவக்கம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி : 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிக்காக, அண்ணா திடலை ஒட்டியிருந்த நகராட்சி கடைகளை உரிமையாளர்களே அகற்றிக் கொண்டனர்.புதுச்சேரி அண்ணா திடலை சுற்றி, 250 நகராட்சி கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு, நகராட்சி மாதம் 1500 ரூபாய் வாடகை வசூலித்து வந்தது.தற்போது, அண்ணா திடலில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், ரூ.12 கோடியே 19 லட்சம் மதிப்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள்

புதுச்சேரி : 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிக்காக, அண்ணா திடலை ஒட்டியிருந்த நகராட்சி கடைகளை உரிமையாளர்களே அகற்றிக் கொண்டனர்.புதுச்சேரி அண்ணா திடலை சுற்றி, 250 நகராட்சி கடைகள் உள்ளன.

இக்கடைகளுக்கு, நகராட்சி மாதம் 1500 ரூபாய் வாடகை வசூலித்து வந்தது.தற்போது, அண்ணா திடலில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், ரூ.12 கோடியே 19 லட்சம் மதிப்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து, அண்ணா திடலை சுற்றியுள்ள குபேர் அங்காடி கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு வருகிறது.ஏற்கனவே சின்ன சுப்புராயப் பிள்ளை வீதி, புஸ்சி வீதியில் இருந்த நகராட்சி கடைகள் அகற்றப்பட்டன.நேற்று, அண்ணா சாலையில் உள்ள கடைகளை உரிமையாளர்களே தாங்களாக முன் வந்து அகற்றினர்.

அண்ணா திடலில், 14 ஆயிரத்து 435 சதுர மீட்டர் பரப்பில் புதிய விளையாட்டு அரங்கம் அமைய உள்ளது.இதன் அடித்தளத்தில் 350 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், தரைதளத்தில் 150 கடைகள், முதல் தளத்தில் 250 விளையாட்டு வீரர்கள் தங்கும் வகையில் 14 கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.விளையாட்டு அரங்கில் 1,500 பேர் அமரக்கூடிய பார்வையாளர் மாடம், அலுவலகம், சேமிப்பு கூடம், பயிற்சி கூடம், கடைக்காரர்களுக்கு கழிவறை ஆகியவை அமைய உள்ளது.புதிய விளையாட்டு அரங்கில், 200 மீட்டர் ஓடுபாதை, கால்பந்து, டென்னிஸ், கைப்பந்து ஆடுகளம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X