பொது செய்தி

இந்தியா

வென்டிலேட்டர் கேட்டவருக்கு கவர்னர் தமிழிசை உதவி

Added : ஆக 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி : வென்டிலேட்டர் தேவை என டுவிட்டரில் உதவி கேட்டவருக்கு, கவர்னர் தமிழிசை இரவோடு இரவாக உதவினார்.புதுச்சேரியைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி, நுரையீரல் பிரச்னை காரணமாக, பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு, நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, வென்டிலேட்டர் தேவைப்பட்டது. வென்டிலேட்டர் காலி இல்லாததால்
 வென்டிலேட்டர் கேட்டவருக்கு கவர்னர் தமிழிசை உதவி

புதுச்சேரி : வென்டிலேட்டர் தேவை என டுவிட்டரில் உதவி கேட்டவருக்கு, கவர்னர் தமிழிசை இரவோடு இரவாக உதவினார்.

புதுச்சேரியைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி, நுரையீரல் பிரச்னை காரணமாக, பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு, நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, வென்டிலேட்டர் தேவைப்பட்டது. வென்டிலேட்டர் காலி இல்லாததால் வெளியில் இருந்து ஏற்பாடு செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

மூதாட்டியின் உறவினர் வருண், வென்டிலேட்டர் உதவி கேட்டு டுவிட்டரில் பதிவிட்டார்.இதை பார்த்த கவர்னர் தமிழிசை, இரவு 11:30 மணிக்கு, மாநில சுகாதாரத் துறை செயலர் அருணுக்கு இந்த தகவலை 'டுவிட்' செய்தார்.அதை தொடர்ந்து, அடுத்த சில நிமிடத்தில் அரசு டாக்டர் துரைசாமி, மூதாட்டியின் உறவினர் வருணை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்தார்.இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒரு நோயாளி மேல் சிகிச்சைக்கு வேறு மருத்துவமனைக்கு சென்றதால், வென்டிலேட்டர் ஒன்று காலியானது. அந்த வென்டிலேட்டரை மூதாட்டிக்கு கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.டுவிட்டரில் உதவி கேட்டவருக்கு, நள்ளிரவிலும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உதவிய கவர்னருக்கு உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X