பொது செய்தி

தமிழ்நாடு

தங்க நகைக்கான 'ஆதார்' தான் ஹால்மார்க் குறியீடு: நுகர்வோருக்கு பாதுகாப்பு, அரசுக்கு வரி வருவாய்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கோவை;நுகர்வோருக்கு பாதுகாப்பு, அரசுக்கு வரி வருவாய், தேச பாதுகாப்பு ஆகிய மூன்று முக்கிய பலன்கள், தங்க நகைக்கானஹால்மார்க் பிரத்யேக அடையாள குறையீட்டால் கிடைக்கின்றன.இந்தியாவில் தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. மக்கள் தரம் குறைவான தங்க நகைகள் வாங்குவதை தவிர்க்க, இந்திய தர நிர்ணய அமைப்பான, பி.ஐ.எஸ்., வழங்கும், 'ஹால்மார்க்' முத்திரை கட்டாயம் என, மத்திய அரசு
 தங்க நகைக்கான 'ஆதார்' தான் ஹால்மார்க் குறியீடு: நுகர்வோருக்கு பாதுகாப்பு, அரசுக்கு வரி வருவாய்

கோவை;நுகர்வோருக்கு பாதுகாப்பு, அரசுக்கு வரி வருவாய், தேச பாதுகாப்பு ஆகிய மூன்று முக்கிய பலன்கள், தங்க நகைக்கானஹால்மார்க் பிரத்யேக அடையாள குறையீட்டால் கிடைக்கின்றன.இந்தியாவில் தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. மக்கள் தரம் குறைவான தங்க நகைகள் வாங்குவதை தவிர்க்க, இந்திய தர நிர்ணய அமைப்பான, பி.ஐ.எஸ்., வழங்கும், 'ஹால்மார்க்' முத்திரை கட்டாயம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. தங்க நகை விற்பனையாளர்கள், 14, 16, 18, 22 என, ஆறு வகை காரட் நகைகளை, ஹால்மார்க் முத்திரையுடன் விற்கலாம். நகைகள் ஒவ்வொன்றிலும், 'ஹால்மார்க் பிரத்யேக அடையாள குறியீடு' (எச்.யு.ஐ.டி.,) இடம்பெற்றிருக்கும்.இதனால், நுகர்வோருக்கு பாதுகாப்பு என்பதுடன், அரசுக்கு முறையாக வரி வருவாய் சென்றடையும். குறிப்பாக, கடத்தல் தங்கம் தவிர்க்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.தங்க காசுகள் சில்லறை விற்பனையாளர் கயிலைராஜன் கூறியதாவது:நமக்கு ஆதார் இருப்பது போன்று, தங்க நகைக்கான 'ஆதார்' தான் எச்.யு.ஐ.டி., குறியீடு. நகை விவரங்கள் பி.ஐ.எஸ்., இணையதளத்தில் இடம்பெறுவதால், தங்கம் விற்பவர், தரம், வாங்குவோர் எனவரலாறு அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்.தங்க நகை அனைத்திலும் பி.ஐ.எஸ்., 'லோகோ', காரட் தரம், எச்.யு.ஐ.டி., கோடு இடம்பெறுவதால், நுகர்வோர் வாங்குவதற்கு சரியான ஆவணம் கிடைக்கிறது. விற்பனையாளர்களும் ஜி.எஸ்.டி., வருமான வரி என அனைத்தையும் நேர்மையாக கையாள முடியும்.போலி, கலப்படம்தவிர்க்கப்பட்டு, நுகர்வோருக்கு பாதுகாப்பு ஏற்படும். நகை திருடு போனால் எத்தனை ஆண்டுகள் கழித்தாலும், போலீசார் உரியவரிடம் சேர்க்க முடியும். இதனால், இறக்குமதி தங்கம் எந்த நோக்கத்துக்கு கொண்டுவரப்பட்டதோ, எச்.யு.ஐ.டி., வாயிலாக அதன் நோக்கம் பூர்த்தியாகிவிடும்.கடத்தல் தங்கம் தடுக்கப்பட்டு, தேச விரோத செயல்களுக்கு தங்கம் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படும். வரி ஏய்ப்பு தவிர்க்கப்பட்டு அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும்.நாட்டுக்கு வருவாய் மட்டுமின்றி, நுகர்வோர் பாதுகாப்பும் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X