காலாப்பட்டு சிறையில் கைதிகள் தற்கொலை முயற்சி

Added : ஆக 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி : காலாப்பட்டு சிறையில் 2 விசாரணை கைதிகள் ஆணியை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.காலாப்பட்டு மத்திய சிறையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, கைதிகளிடம் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதைகண்டித்து, 7 கைதிகள் கையை கிழித்து கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். மேலும் 2 பேர் சோப்பு, ஷாம்பு கரைசல் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி : காலாப்பட்டு சிறையில் 2 விசாரணை கைதிகள் ஆணியை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காலாப்பட்டு மத்திய சிறையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, கைதிகளிடம் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதைகண்டித்து, 7 கைதிகள் கையை கிழித்து கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். மேலும் 2 பேர் சோப்பு, ஷாம்பு கரைசல் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் சிறைக்கு திரும்பினர்.இந்த நிலையில், சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் தொலைபேசியில் மூன்று நிமிடம் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விசாரணை கைதி சுகன், நேற்று மாலை அவரது குடும்பத்தினருக்கு போன் செய்து 3 நிமிடத்தை தாண்டி பேசியுள்ளார். மற்ற கைதிகளும் பேச வேண்டும் என்பதால், இணைப்பு துண்டிக்கப்பட்டது.தொலைபேசி மூலம் குடும்பத்தினருடன் பேச சிறைத்துறை அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகக்கூறி சுகன், பிரதீப் உட்பட 2 கைதிகள், இரும்பு ஆணியை விழுங்கினர். உடனடியாக இருவரும் தனி யார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கைதி சுகன் ஏற்கனவே பல முறை ஆணி விழுங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X