காணாமல்போன லேப் டெக்னீசியனை மீட்க கோரி உறவினர்கள் மறியல்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
வில்லியனுார் : காணாமல் போன லேப் டெக்னீசியனை கண்டுபிடித்து கொடுக்குமாறு வலியுறுத்தி, போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.வில்லியனுார் கணுவாப்பேட்டை முதல் வன்னியர் தெருவை சேர்ந்தவர் பாலபாஸ்கர் மனைவி ஆரோக்கிய மேரி (31). இவர் கனக செட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 19ம் தேதி வேலைக்கு சென்ற
 காணாமல்போன லேப் டெக்னீசியனை மீட்க கோரி உறவினர்கள் மறியல்

வில்லியனுார் : காணாமல் போன லேப் டெக்னீசியனை கண்டுபிடித்து கொடுக்குமாறு வலியுறுத்தி, போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வில்லியனுார் கணுவாப்பேட்டை முதல் வன்னியர் தெருவை சேர்ந்தவர் பாலபாஸ்கர் மனைவி ஆரோக்கிய மேரி (31). இவர் கனக செட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 19ம் தேதி வேலைக்கு சென்ற ஆரோக்கியமேரி வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்தனர்.

இந்நிலையில், ஆரோக்கியமேரியை மீட்டுத் தரக் கோரி, அவரது உறவினர்கள் நேற்று இரவு 8:00 மணியளவில் வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷன் முன் மறியலில் ஈடுபட்டனர்.அப்போது, மருத்துவமனையில் உடன் பணியாற்றும் அரியூரை சேர்ந்த டிரைவர் ஒருவர் ஆரோக்கியமேரியை நகைக்காக கடத்தி சென்றுள்ளார். அவரை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.மறியலில் ஈடுபட்டவர்களிடம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆரோக்கியமேரியை கண்டுபிடித்து மீட்டுத் தருவதாக கூறியதை ஏற்று, மறியலை கைவிட்டனர். மறியலால் அப்பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X