பொது செய்தி

இந்தியா

பூதங்குடி வீனஸ் மதகில் உபரி நீர் வெளியேற்றம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு : வீராணம் ஏரி யின் நீர்மட்டம் 47.6 அடி உயர்ந்துள்ளதை தொடர்ந்து உபரி நீரை வெள்ளாறு அணைக்கட்டு வழியாக வாலாஜா ஏரிக்கு அனுப்பும் பணி நடக்கிறது.கடலுார் மாவட்டத்தின் வீராணம் ஏரி பூதங்குடி வீனஸ் மதகில் துவங்கி லால்பேட்டை வரை 14 கி.மீ., துாரமும், 6 கி.மீ., அகல பரப்பளவு கொண்டது.ஏரியில் 48 அடி வரை தண்ணீர் தேக்கி, விவசாயத்திற்கும், சென்னைக்கு குடிநீர் அனுப்பி
 பூதங்குடி வீனஸ் மதகில் உபரி நீர் வெளியேற்றம்

சேத்தியாத்தோப்பு : வீராணம் ஏரி யின் நீர்மட்டம் 47.6 அடி உயர்ந்துள்ளதை தொடர்ந்து உபரி நீரை வெள்ளாறு அணைக்கட்டு வழியாக வாலாஜா ஏரிக்கு அனுப்பும் பணி நடக்கிறது.

கடலுார் மாவட்டத்தின் வீராணம் ஏரி பூதங்குடி வீனஸ் மதகில் துவங்கி லால்பேட்டை வரை 14 கி.மீ., துாரமும், 6 கி.மீ., அகல பரப்பளவு கொண்டது.ஏரியில் 48 அடி வரை தண்ணீர் தேக்கி, விவசாயத்திற்கும், சென்னைக்கு குடிநீர் அனுப்பி வருகின்றனர். கீழணையிலிருந்து வடவாற்றில் 1700 கன அடி வரை தண்ணீர் கடந்த 4 நாட்களாக வீராணம் ஏரிக்கு வந்தது. ஏரி முழு கொள்ளளவு நிரம்பி பாசன வாய்க்கால் ஷட்டர்கள் மூடப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை .வெகுவாக நிரம்பி வரும் வீராணம் ஏரியில் 48 முதல் 49 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க வைக்க முடியும்.

கீழணையிலிருந்து வரக்கூடிய 1700 கன அடி தண்ணீர், பூதங்குடி வீனஸ் மதகு வழியாக 600 கன அடி வரை திறந்து வெளியேற்றப்படுகிறது. பூதங்குடி வீனஸ் மதகில் திறந்துள்ள தண்ணீரை வெள்ளாறு அணைக்கட்டில் சேமித்து வாலாஜா ஏரிக்கு அனுப்பும் பணி நடக்கிறது.வீராணம் ஏரி முழு கொள்ளளவு நிரம்பியதால் டெல்டா பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் சம்பா பாசனம் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு தட்டுப்பாடின்றி குடிதண்ணீர் அனுப்பும் பணியும் நடக்கிறது. ஏரி முழு கொள்ளளவு நிரம்பியதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X