பொது செய்தி

தமிழ்நாடு

தரமான உரம் கிடைக்க நடவடிக்கை: வேளாண் இணை இயக்குனர் தகவல்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தரமான உரம் கிடைக்கும் வகையில் உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் மூலம் வேளாண் துறை நடவடிக்கைகள் எடுப்பதாக இணை இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கும், வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் உள்ள உரக்கட்டுபாட்டு ஆய்வகத்தில்

விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தரமான உரம் கிடைக்கும் வகையில் உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் மூலம் வேளாண் துறை நடவடிக்கைகள் எடுப்பதாக இணை இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கும், வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் உள்ள உரக்கட்டுபாட்டு ஆய்வகத்தில் உரமாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.துல்லியமான ஆய்வை மேற்கொள்ள புதிய சாதனங்கள் அனைத்தும் ஆய்வகங்களுக்கு அரசு வழங்கியுள்ளதால் உரமாதிரி ஆய்வுகள் எளிதில் முடித்து ஆய்வு முடிவுகள் தக்க சமயத்தில் வட்டாரங்களுக்கு கிடைக்கிறது.இங்கு, உர மாதிரிகள் பெற்று பல பரிசோதனைகளுக்குட்படுத்தி பெற்ற ஆய்வு முடிவுகள் 15 நாட்களுக்குள் சம்மந்தபட்ட வட்டாரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.தரமற்றவை என அறிவிக்கப்பட்டால் தரமற்ற உரங்களை விற்பனை செய்த மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மீது உரக்கட்டுப்பாட்டு ஆணையின் பேரில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.விவசாயிகளுக்கு தரமான உரங்கள் கிடைக்கவும், உணவு உற்பத்தியை பெருக்கும் வகையில் உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் மூலம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X