பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் முதலீட்டுக்கழக சிறப்பு தொழில் கடன் விழா

Added : ஆக 23, 2021
Share
Advertisement
விழுப்புரம்-தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக சிறப்பு தொழில் கடன் விழாவில் 25 சதவீதம் மூலதன மானியம் மற்றும் 6 சதவீத வட்டி மானியத்தோடு கடனுதவி பெற்று சுயதொழில் துவங்கலாம் என கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் நிதிக்கழகம் ஆகும். இந்த கழகம், குறு, சிறு மற்றும் நடுத்தர

விழுப்புரம்-தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக சிறப்பு தொழில் கடன் விழாவில் 25 சதவீதம் மூலதன மானியம் மற்றும் 6 சதவீத வட்டி மானியத்தோடு கடனுதவி பெற்று சுயதொழில் துவங்கலாம் என கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் நிதிக்கழகம் ஆகும். இந்த கழகம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழில் துவங்கவும், தற்போதுள்ள தொழிலை விரிவுபடுத்தவும் பல சிறப்பு திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்படுகிறது.விழுப்புரம், 23-ஏ, ரங்கநாதன் வீதி, ஓட்டல் உட்லண்ட்ஸ் காம்ப்ளக்ஸ், முதல் மாடியில் உள்ள கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா கடந்த 18 ம் தேதியில் இருந்து வரும் 27 ம் தேதி வரை நடக்கிறது.இதில், டி.ஐ.ஐ.சி., பல திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் (25 விழுக்காடு மூலதன மானியம், 6 விழுக்காடு வட்டி மற்றும் இதர மானியங்கள்), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் ஆகியவை குறித்த விளக்கம் தரப்படுகிறது.தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.இந்த முகாமில் சமர்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படுகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X