பொது செய்தி

தமிழ்நாடு

100வது ஆண்டில் அரசு பள்ளி; அமைச்சர், கலெக்டர் ஆய்வு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் நுாற்றாண்டு விழா காணும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர், கலெக்டர் ஆய்வு செய்தனர்.விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கடந்த 1921ம் ஆண்டு, ஆங்கிலேயர் காலத்தில் துவங்கியது.நுாறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள பள்ளிக்கு, முன்னாள் மாணவர்கள் இணைந்து, நுாற்றாண்டு விழா கொண்டாட
 100வது ஆண்டில் அரசு பள்ளி; அமைச்சர், கலெக்டர் ஆய்வு

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் நுாற்றாண்டு விழா காணும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர், கலெக்டர் ஆய்வு செய்தனர்.விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கடந்த 1921ம் ஆண்டு, ஆங்கிலேயர் காலத்தில் துவங்கியது.

நுாறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள பள்ளிக்கு, முன்னாள் மாணவர்கள் இணைந்து, நுாற்றாண்டு விழா கொண்டாட தீர்மானித்தனர்.கலையரங்கம், புதிய கட்டடங்கள், விளையாட்டு மைதானம் சீரமைப்பு போன்ற வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற முடிவு செய்தனர்.இது தொடர்பாக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், கலெக்டர் பாலசுப்ரமணியம், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பள்ளியை ஆய்வு செய்தனர்.

அப்போது, 1921 முதல் 2021 வரை பள்ளியில் பணிபுரிந்த தலைமை ஆசிரியர்களின் பெயர் பலகை, கல்வெட்டுகள், பழமையான கட்டடத்தை பார்வையிட்டனர்.பழுதான கட்டடங்களை அகற்றி, புதிய கட்டடங்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வறை கட்டித்தர பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.சப் கலெக்டர் அமித் குமார், சி.இ.ஓ., (பொறுப்பு) சுந்தரமூர்த்தி, ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் சுரேஷ் சந்த், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் அருணாசலம், செயலாளர் வழக்கறிஞர் பாலச்சந்திரன், பொருளாளர் சீனிவாசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X