பொது செய்தி

தமிழ்நாடு

நம்ப முடியலீங்க; காத்திருக்காமல் கிடைத்தது தடுப்பூசி!

Added : ஆக 23, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுாரில் நீண்ட நேரம் காத்திருக்காமல், நேரடியாக தடுப்பூசி போட முடிந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அன்னுார் ஒன்றியத்தில், நேற்று பொகலுார், மூக்கனுார், செம்மாணி செட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, தலா, 250 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டன.பொகலுார் மற்றும் செம்மாணி செட்டிபாளையத்தில், மக்கள் வரிசையில் நின்று காத்திருந்து தடுப்பூசி போட்டனர்.
 நம்ப முடியலீங்க; காத்திருக்காமல் கிடைத்தது தடுப்பூசி!

அன்னுார்:அன்னுாரில் நீண்ட நேரம் காத்திருக்காமல், நேரடியாக தடுப்பூசி போட முடிந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அன்னுார் ஒன்றியத்தில், நேற்று பொகலுார், மூக்கனுார், செம்மாணி செட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, தலா, 250 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டன.பொகலுார் மற்றும் செம்மாணி செட்டிபாளையத்தில், மக்கள் வரிசையில் நின்று காத்திருந்து தடுப்பூசி போட்டனர். மூக்கனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒதுக்கீட்டை விட, வரிசையில் நின்றவர்கள் குறைவாகவே இருந்தனர். இதனால், பலரும் காத்திருக்காமல் நேரடியாக தடுப்பூசி போட முடிந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.வழக்கமாக, தடுப்பூசி முகாம் நடக்கும் இடங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் தடுப்பூசி கிடைக்காமல், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வர். ஆனால், நேற்று, வந்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.ஐந்தாயிரம் பேர்அன்னுார் ஒன்றியத்தில், கடந்த 15ம் தேதி 300 பேருக்கு; 16ம் தேதி 2,550; 18ம் தேதி 300; 19ம் தேதி 900; 21ம் தேதி 520; 22ம் தேதி 750 பேருக்கு என, ஒரே வாரத்தில், மொத்தம் 5,320 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.இதேபோல் சில வாரங்களுக்கு, அன்னுார் ஒன்றியத்திற்கு தடுப்பூசி ஒதுக்கப்பட்டால், தடுப்பூசிக்கு மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படாது.தொற்று சோதனைஅன்னுார் ஒன்றியத்தில் நேற்று இரண்டு பேருக்கு தொற்று உறுதியானது. 120 பேருக்கு, தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. 750 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.கோவில்பாளையம் ஒன்றியத்தில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. கோவில்பாளையத்தில் 250 பேருக்கு, இடிகரையில் 250 பேருக்கு, வையம்பாளையம் எல்.ஜி.பி., நிறுவனத்தில் 750 பேருக்கு என, ஆயிரத்து 250 பேருக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது. 243 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X