பொது செய்தி

தமிழ்நாடு

100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் பணி கலெக்டர் தலைமையில் ஆலோசனை

Added : ஆக 23, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில், நுாறு சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது:மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகதார நிலையங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி முகாம் நடத்த

விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில், நுாறு சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது:மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகதார நிலையங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும்.இதற்காக சுகாதரம், வருவாய், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், பள்ளிக்கல்வித் துறை, பேரூராட்சிகள் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். நகராட்சிகளில் தனித்தனியே மருத்துவ குழுக்கள் அமைத்து, செவிலியர்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும்.கிராமங்களில் தாசில்தார், பி.டி.ஓ.,க்கள் மூலம் அவர்கள் துறையில் உள்ள வருவாய் ஆய்வாளர், வி.ஏ.,ஓ., ஊராட்சி செயலாளர், துாய்மைப் பணியாளர்கள் மூலம் ஊராட்சி மக்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, இணை இயக்குனர் சண்முகக்கனி, துணை இயக்குனர் பொற்கொடி, முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X