பொது செய்தி

தமிழ்நாடு

பகுதி நேர ரேஷன் கடை அமைக்க கோரிக்கை

Added : ஆக 23, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்;ரேஷன் பொருட்கள் வாங்க, 3 கி.மீ., செல்ல வேண்டி இருப்பதால், குறிஞ்சி நகர் பகுதியில், பகுதி நேர ரேஷன் கடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஜடையம்பாளையம் ஊராட்சியில், இனியா நகர், குறிஞ்சி நகர், ஜடையம்பாளையம், கனிஷ்மாநகர், அப்துல்கலாம் நகர், ஐஸ்வர்யா நகர், சக்தி நகர் உட்பட, 12க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன.இந்த நகர்களில் 500-க்கும் மேற்பட்ட

மேட்டுப்பாளையம்;ரேஷன் பொருட்கள் வாங்க, 3 கி.மீ., செல்ல வேண்டி இருப்பதால், குறிஞ்சி நகர் பகுதியில், பகுதி நேர ரேஷன் கடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஜடையம்பாளையம் ஊராட்சியில், இனியா நகர், குறிஞ்சி நகர், ஜடையம்பாளையம், கனிஷ்மாநகர், அப்துல்கலாம் நகர், ஐஸ்வர்யா நகர், சக்தி நகர் உட்பட, 12க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன.இந்த நகர்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதி மக்கள், ரேஷன் பொருட்களை வாங்க, மூன்று கி.மீ., தொலைவில் உள்ள ஜடையம்பாளையம்புதுாருக்கு செல்ல வேண்டியுள்ளது. போதிய பஸ் வசதி இல்லாததால்வயதானவர்கள் நடந்து செல்கின்றனர்.எனவே, குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள ரிசர்வ் சைட்டில், பகுதி நேர ரேஷன் கடை கட்டினால், சுற்றியுள்ள, 12க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு வசதியாக இருக்கும், என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X