பொது செய்தி

தமிழ்நாடு

திரையரங்கம் திறக்க அனுமதி துாய்மைப் பணிகள் ஜரூர்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
விழுப்புரம்-கொரோனா ஊரடங்கு தளர்வில் திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி வழங்கியதையொட்டி, விழுப்புரத்தில் திரையரங்குகளில் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யும் பணி நடந்தது.கொரோனா தொற்று பரவலையொட்டி, தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன. தற்போது நோய் தொற்று தீவிரம் குறைந்து வரும் சூழலில் தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கில் இருந்து தளர்வு

விழுப்புரம்-கொரோனா ஊரடங்கு தளர்வில் திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி வழங்கியதையொட்டி, விழுப்புரத்தில் திரையரங்குகளில் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யும் பணி நடந்தது.கொரோனா தொற்று பரவலையொட்டி, தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன. தற்போது நோய் தொற்று தீவிரம் குறைந்து வரும் சூழலில் தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து வருகிறது.இதையொட்டி, இன்று 23ம் தேதி முதல் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.அதனைத் தொடர்ந்து, திரையரங்குகளில் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், இருக்கைகளுக்கு கிருமிநாசினி தெளித்தும், இருக்கைகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அமரும் வகையில் தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X