பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்.. 7.42 லட்சம் பேர்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கடலூர் :.3 மாதத்தில் மட்டும் 5 லட்சத்தை தாண்டியதுதமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவியதையடுத்து, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுத்தது. இதனால் கடந்த மே மாதம் கடலுார் மாவட்டத்தில் தினசரி 800 பேருக்கு மேல் இருந்த பாதிப்பு தற்போது தினசரிபாதிப்பு 60 ஆக குறைந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை கொரோனா பாதிப்பு 61 ஆயிரத்து 833 ஆக

கடலூர் :.3 மாதத்தில் மட்டும் 5 லட்சத்தை தாண்டியதுதமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவியதையடுத்து, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுத்தது. இதனால் கடந்த மே மாதம் கடலுார் மாவட்டத்தில் தினசரி 800 பேருக்கு மேல் இருந்த பாதிப்பு தற்போது தினசரிபாதிப்பு 60 ஆக குறைந்துள்ளது.

மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை கொரோனா பாதிப்பு 61 ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது. 60 ஆயிரத்து 340 பேர்சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று முன்தினம் வரை 830 பேர் இறந்துள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில், 663 பேர், சிகிச்சை பெறுகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இதற்காக மருத்துமனைகளில் பணி புரியும், டாக்டர்கள், செவிலியர்கள் ஊழியர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்பட்டது.

இரண்டாம் கட்டமாக காவலர்கள், வருவாய்த் துறையினர், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.தமிழகம் முழுவதும் நேற்று வரை 2 கோடியே 85 லட்சத்து 60 ஆயிரத்து 435 பேருக்கு தடுப்பூசிபோடப்பட்டுள்ளது. மொத்த தடுப்பூசி போட்டவர்களில் கடலுார் மாவட்டம் தற்போது 10வது இடத்தில் உள்ளது. இதில் ஆண்கள் 3 லட்சத்து 81 ஆயிரத்து 334 பேர், பெண்கள் 3 லட்சத்து 60 ஆயிரத்து 943 பேர், இதரர் 102 பேர் என, 7லட்சத்து 42 ஆயிரத்து 379 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இதில், 6 லட்சத்து 19 ஆயிரத்து 173 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1 லட்சத்து 23 ஆயிரத்து 206 பேர் இரண்டாவதுதவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

இதில், 6 லட்சத்து 41 ஆயிரத்து 978 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 96 ஆயிரத்து132 பேர் கோவாக்சின் தடுப்பூசியும், 4,269 பேர் ஸ்புட்னிக் தடுப்பூசியும் போட்டுள்ளனர்.இதில், 18 முதல் 45 வயது வரை 3 லட்சத்து 76 ஆயிரத்து 691 பேரும், 45 முதல் 60 வயது வரை 2 லட்சத்து 41 ஆயிரத்து 789பேரும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 899 பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.நேற்றுமட்டும் 2,831 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.அதிகபட்சமாக என்.எல்.சி., மருத்துவமனையில் 37 ஆயிரத்து 268 பேருக்கும், கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் 22 ஆயிரத்து 752 பேருக்கும், தடுப்பூசி போடப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி வரை 2 லட்சத்து12 ஆயிரத்து 245 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், மூன்று மாதங்களில் மட்டும் 5 லட்சத்திற்கும்மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X