பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமரின் காப்பீடு திட்ட அட்டை வினியோகம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், பொதுமக்களுக்கு பிரதமரின் இலவச மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்கும் நிகழ்ச்சி, அ.மு.காலனியில் நேற்று நடந்தது. பா.ஜ., ஒன்றிய தலைவர் சத்யராஜ் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில், 516 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர், முருகேஷ் பேசுகையில், "இத்திட்டத்தில், அரசு மற்றும் தனியார்
 பிரதமரின் காப்பீடு திட்ட அட்டை வினியோகம்

அன்னுார்:அன்னுார் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், பொதுமக்களுக்கு பிரதமரின் இலவச மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்கும் நிகழ்ச்சி, அ.மு.காலனியில் நேற்று நடந்தது. பா.ஜ., ஒன்றிய தலைவர் சத்யராஜ் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில், 516 பேருக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர், முருகேஷ் பேசுகையில், "இத்திட்டத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ஐந்து லட்சம் ரூபாய் வரை, இலவசமாக சிகிச்சை பெறலாம். கோவை நகரில் 15 மருத்துவமனைகள், இந்த திட்டத்தில் இலவச சிகிச்சை அளிக்கின்றன. இதய நோய், புற்றுநோய் உள்ளிட்ட 500 வகையான நோய்களுக்கு இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம். பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல், மாவட்ட செயலாளர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X