பொது செய்தி

தமிழ்நாடு

பட்டணத்தில் அடர்வனம்: தன்னார்வலர்கள் ஆர்வம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
சூலுார்:பட்டணம் கிராமத்தில், அடர் வனம் அமைக்க, மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நேற்று துவங்கியது.சூலுார் அடுத்த பட்டணத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில், அறநிலையத் துறையினருடன் இணைந்து, அடர் வனம் அமைக்க, தன்னார்வலர்கள் முடிவு செய்தனர்.முதல்கட்டமாக, இரண்டரை ஏக்கர் பரப்பில், 1,000
 பட்டணத்தில் அடர்வனம்: தன்னார்வலர்கள் ஆர்வம்

சூலுார்:பட்டணம் கிராமத்தில், அடர் வனம் அமைக்க, மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நேற்று துவங்கியது.சூலுார் அடுத்த பட்டணத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில், அறநிலையத் துறையினருடன் இணைந்து, அடர் வனம் அமைக்க, தன்னார்வலர்கள் முடிவு செய்தனர்.முதல்கட்டமாக, இரண்டரை ஏக்கர் பரப்பில், 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி, நேற்று துவங்கியது.சிறுதுளி அமைப்பின் நிறுவனர் வனிதா மோகன், மரக்கன்றை நடவு செய்து, பணியை துவக்கி வைத்தார்.கோவில் தக்கார் மாதேஸ்வரன், மணியகாரர் துரைசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தன்னார்வலர்கள் பரணி, வித்யா சாரதி மற்றும் குழுவினர், பல்வேறு வகையான மூலிகை செடிகள், 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரக்கன்றுகள், தென்னை, வேம்பு, நாவல் உள்ளிட்ட பலன் தரும் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.நிகழ்ச்சியில், இளைய தலைமுறையினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X