பொது செய்தி

தமிழ்நாடு

தடாகத்தில் நள்ளிரவில் செங்கல் கடத்துறாங்க! எஸ்.பி.,யிடம் பாதுகாப்புக் குழு புகார்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்;சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்ந்து, கனிமவளங்கள் திருடப்பட்டு வருவதாகவும், நள்ளிரவில் செங்கற்கள் லாரிகளில் கடத்திச் செல்லப்படுவதாவும், தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்புக்குழு கோவை எஸ்.பி.,யிடம் மனு அளித்துள்ளது.தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில், செங்கல் சூளைகள் செயல்பட்டு வந்தன. இவற்றால், சுற்றுச்சூழல்

பெ.நா.பாளையம்;சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்ந்து, கனிமவளங்கள் திருடப்பட்டு வருவதாகவும், நள்ளிரவில் செங்கற்கள் லாரிகளில் கடத்திச் செல்லப்படுவதாவும், தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்புக்குழு கோவை எஸ்.பி.,யிடம் மனு அளித்துள்ளது.தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில், செங்கல் சூளைகள் செயல்பட்டு வந்தன. இவற்றால், சுற்றுச்சூழல் சிதைக்கப்படுவதாகவும், வன உயிரினங்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.இது தொடர்பாக, சமூக ஆர்வலர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, செங்கல் சூளைகள் செயல்பட கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி, தடை விதிக்கப்பட்டது.'தடாகம் பகுதியில், செம்மண்ணை ஓரிடத்தில் இருந்து, இன்னோர் இடத்திற்குக் கொண்டு செல்லவோ, குவித்து வைப்பதோ கூடாது. செங்கற்களை உற்பத்தி செய்யவும், உற்பத்தி செய்யப்பட்ட செங்கற்களை லாரிகளில் கொண்டு செல்லவும் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.ஆனால், இதையும் மீறி, தொடர்ந்து செங்கற்கள் லாரிகளில் கடத்திச் செல்லப்படுவதாக புகார் எழுந்துள்ளது.'சீல்' இல்லைதடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழு, ஒருங்கிணைப்பாளர் கணேஷ், கோவை ரூரல் எஸ்.பி., செல்வ நாகரத்தினத்திடம் அளித்துள்ள புகார் மனு:சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, லாரிகளில் செங்கல் கடத்திச் செல்வதாக, தடாகம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.செங்கல் சூளைகள் 'சீல்' வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், உண்மையில் 'சீல்' எதுவும் வைக்கப்படவில்லை. உரிமையாளர்களுக்கு அறிவிக்கைகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.இதைப் பயன்படுத்தி, சில செங்கல் சூளை உரிமையாளர்கள், இப்பகுதியில் உள்ள மின்சாரம், ஆழ்குழாய் கிணறு ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.நள்ளிரவில் கடத்தல்நள்ளிரவு, 12:00 மணிக்கு செங்கற்களை லாரிகளில் லோடு செய்து, வினியோகம் செய்கின்றனர்.மேலும், இதுதொடர்பாக தடாகம் போலீசார், செங்கல் லாரிகளை கைப்பற்றினாலும், லாரி டிரைவர்கள் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்கின்றனர்.உரிமையாளர்கள் மீது, வழக்கு எதுவும் பதிவு செய்யப்படுவதில்லை. இதை மீறி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், அவர்கள் சொந்த ஜாமீனில் உடனடியாக விடுவிக்கப்படுகின்றனர்.வெளியேற்றணும்சட்டத்தை மீறும் செங்கல் உரிமையாளர்கள், சொந்த ஜாமீனில் விடுவிக்கப்படுவதை தடுக்க வேண்டும். மேலும், மூடப்பட்டுள்ள செங்கல் சூளைகளில் உள்ள தொழிலாளர்களை, மாவட்ட நிர்வாகம் வெளியேற்ற வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.செங்கல் சூளைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், உண்மையில், 'சீல்' எதுவும் வைக்கப்படவில்லை. உரிமையாளர்களுக்கு அறிவிக்கைகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X