பொது செய்தி

தமிழ்நாடு

வி.ஏ.ஓ., அலுவலகத்தில் நடந்தது என்ன? விவசாயி வெளியிட்ட வீடியோ

Added : ஆக 23, 2021
Share
Advertisement
அன்னுார்:வி.ஏ.ஓ., அலுவலகத்தில் நடந்தது குறித்து, விவசாயி கோபால்சாமி, விளக்கி புதிய வீடியோ வெளியிட்டுள்ளார்.ஒட்டர்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில், கிராம உதவியாளர் முத்துசாமி, கோபால்சாமியின் காலில் விழுந்து கதறி மன்னிப்பு கேட்கும் காட்சி வெளியானது. இதையடுத்து, கோபால்சாமி மீது, வன்கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் கோபால்சாமியை தேடி

அன்னுார்:வி.ஏ.ஓ., அலுவலகத்தில் நடந்தது குறித்து, விவசாயி கோபால்சாமி, விளக்கி புதிய வீடியோ வெளியிட்டுள்ளார்.ஒட்டர்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில், கிராம உதவியாளர் முத்துசாமி, கோபால்சாமியின் காலில் விழுந்து கதறி மன்னிப்பு கேட்கும் காட்சி வெளியானது. இதையடுத்து, கோபால்சாமி மீது, வன்கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் கோபால்சாமியை தேடி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 13ம் தேதி வெளியான முழு வீடியோவில், கிராம உதவியாளர் முத்துசாமி, கோபால்சாமியை தாக்கியது தெரிய வந்தது.இந்நிலையில், கோபால்சாமி, அங்கு நடந்தது குறித்து பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது: எனக்கு சொந்தமான ஆவணத்தில், என் பெயரை நீக்கி, உறவினர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கேட்டபோது, கிராம உதவியாளர் என்னை தாக்கினார்.போலீஸ் மற்றும் வருவாய்த்துறை விசாரணையில் தெளிவாக கூறினேன். எனினும், முத்துசாமி என் காலில் விழுந்து கதறும் வீடியோ மட்டும் வெளியானதால், என் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விட்டனர்.எனது ஆவணங்களில் முறைகேடு செய்து, என்னைத் தாக்கி, எஸ்.பி., மற்றும் டி.ஆர்.ஓ., தலைமையிலான விசாரணைக் குழுவில், பொய்யான வாக்குமூலம் அளித்த வி.ஏ.ஓ., கலைச்செல்வி, முத்துசாமியை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். அவர்கள் மீது, வழக்குப் பதிந்து, சிறையில் அடைக்க வேண்டும்.என் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். சில அரசு ஊழியர்கள், வன்கொடுமை சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர். எனவே, அரசு ஊழியர்கள் வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்துவதில் இருந்து, விலக்க வேண்டும்.இவ்வாறு, அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X