பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு விழிப்புணர்வு; வீடு வீடாக பிரசாரம்: அறிகுறிகள் இருந்தால் சொல்லுங்க

Added : ஆக 23, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்;சிறுமுகையில் கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்து, டெங்கு களப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.சிறுமுகை பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பேரூராட்சி சார்பில், கொரோனா தடுப்பு களப்பணியாளர்கள் தற்காலிகமாக

மேட்டுப்பாளையம்;சிறுமுகையில் கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்து, டெங்கு களப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.சிறுமுகை பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பேரூராட்சி சார்பில், கொரோனா தடுப்பு களப்பணியாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள், தினமும் வீடு வீடாகச் சென்று, பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், தலைவலி ஆகியவை உள்ளதா என கணக்கெடுத்து வருகின்றனர்.இதுகுறித்து சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) சாஜன் மேத்யூ கூறியதாவது:சிறுமுகை பேரூராட்சியில், 6,086 வீடுகள் உள்ளன. இதில், 113 வீடுகளுக்கு ஒருவர் வீதம், 54 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு, தினமும் சென்று, காய்ச்சல், தலைவலி, சளி ஆகிய அறிகுறிகள் உள்ளனவா, என, கேட்டறிகின்றனர்.மேலும், தெர்மல் ஸ்கேனர் வாயிலாக, உடலின் வெப்பநிலை பரிசோதனை செய்கின்றனர். இதில் யாருக்கேனும் நோய் தொற்றுக்கான அறிகுறி இருப்பின், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.தற்போது, பொதுமக்கள் மத்தியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.'ஏடிஸ்' வகை கொசுக்களால், டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகாமல் இருக்க, தடுப்பு நடவடிக்கைகள் பேரூராட்சி சார்பில் மேற்கொள்ளப்படுகின்றன.வீடு வீடாக, நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல், தலைவலி, கைகால் மூட்டு வலி, கண்களின் பின்புறம் வலி, தோலில், சிவப்பு நிறத்தில் சிறு சிறு தடிப்புகள் இருந்தால், அது டெங்கு காய்ச்சலின் அறிகுறியாகும்.இது மாதிரி ஏதேனும் இருந்தால், பொதுமக்கள் வீடுகளுக்கு வரும் களப்பணியாளர்களிடம், விபரங்களை தெரிவிக்க வேண்டும்.வீடுகளுக்கு வரும் களப் பணியாளர்களுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து, கொரோனா, டெங்கு காய்ச்சலை பரவலைத் தடுக்க முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.கடந்த ஒரு வாரத்தில் சிறுமுகை பகுதியில், கொரோனா வைரஸ் தொற்று, யாருக்கும் இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X