சுடு சாம்பலில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி சாவு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
ஏரியில் சுடு சாம்பல் கொட்டியவர் மீது வழக்குகள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ஏரியில் கொட்டப்பட்டிருந்த ரைஸ் மில் சுடு சாம்பலால் பலத்த தீக்காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் வெங்கடேஷ், 14; இவர், அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படிந்த வந்தார்.கடந்த 24ம்

ஏரியில் சுடு சாம்பல் கொட்டியவர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ஏரியில் கொட்டப்பட்டிருந்த ரைஸ் மில் சுடு சாம்பலால் பலத்த தீக்காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் வெங்கடேஷ், 14; இவர், அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படிந்த வந்தார்.கடந்த 24ம் தேதி ஏமப்பேர் ஏரிப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு கொட்டப்பட்டிருந்த ரைஸ் மில் சுடு சாம்பலில் தெரியாமல் கால் வைத்தபோது 2 கால்களிலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கடந்த 30ம் தேதி சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர், நேற்று முன்தினம் இறந்தார்.இது குறித்து கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார், ஏரியில் சுடு சாம்பலைக் கொட்டிய ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் மகன் சிவா மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். மேலும், சுடு சாம்பலைக் கொட்ட பயன்படுத்திய டிராக்டர், டிப்பரை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X