பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., மீது மக்களுக்கு சந்தேகம் வந்து விட்டது இந்திய கம்யூ., செயலாளர் கூறுகிறார்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கடலுார் : 'கொடநாடு விவகாரத்தில் நடந்துள்ள கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் யாருக்காக ஈடுபட்டனர் என்பது தான் கேள்வி' என இந்திய கம்யூ., கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.அவர் அளித்த பேட்டி: லோக்சபா செயல்படாமலே 21க்கும் அதிகமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை, சுப்ரீம் கோர்ட் நீதிபதியே விமர்சனம் செய்துள்ளார். இதனால், வரும் 23 முதல் 27ம் தேதி வரை,

கடலுார் : 'கொடநாடு விவகாரத்தில் நடந்துள்ள கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் யாருக்காக ஈடுபட்டனர் என்பது தான் கேள்வி' என இந்திய கம்யூ., கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

அவர் அளித்த பேட்டி: லோக்சபா செயல்படாமலே 21க்கும் அதிகமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை, சுப்ரீம் கோர்ட் நீதிபதியே விமர்சனம் செய்துள்ளார். இதனால், வரும் 23 முதல் 27ம் தேதி வரை, 'மக்கள் லோக்சபா' நிகழ்ச்சியை நடத்த உள்ளோம். இதற்காக, 5 லட்சம் துண்டு பிரசுரங்கள் அச்சடித்து மக்களிடம் விநியோகிக்க உள்ளோம். இதில், மோடி அரசில் மக்கள் படும் துன்பங்களை விளக்கி உள்ளோம்.

தினமும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம்.வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதை வரவேற்கிறோம். இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, பனை மரம் பாதுகாப்பு, பாரம்பரிய நெல் வகைகள் பாதுகாப்பு, 33 சதவீதம் காடுகள் அதிகரிப்பு போன்ற திட்டங்கள் வரவேற்கக்கூடியது. கூடுதலாக செய்ய வேண்டியதையும் கட்சி சார்பில் எடுத்து கூறியுள்ளோம். கொடநாடு விவகாரத்தில் நடந்துள்ள கொலை, கொள்ளையில் தொடர்புடையவர்கள் யாருக்காக ஈடுபட்டனர் என்பது தான் இப்போது கேள்வி. அப்படி இருக்கும் போது, சட்டசபையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடும் அ.தி.மு.க., மீது மக்களுக்கு சந்தேகம் வந்து விட்டது.

இந்த வழக்கில் கைதானவர் சுமார் 3 மணி நேரம் எஸ்.பி., யிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனடிப்படையில் தான் தற்போது விசாரணை நடக்கிறது.இந்த வழக்கை விசாரிக்க வேண்டியது இல்லை என்று ஒரு கட்சியின் அகில இந்திய நிர்வாகியே கூறுவது விந்தையாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.,வுடன் கூட்டணி தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.மாநில செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் மணிவாசகம், மாநில குழு உறுப்பினர் குளோப், மாவட்ட செயலாளர் துரை, வட்ட செயலாளர் சுந்தர்ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X