பொது செய்தி

இந்தியா

மியாட் மருத்துவமனை இருதய நிபுணர் புதுச்சேரிக்கு 28ம் தேதி வருகை

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கடலுாரில் 29ம் தேதி முகாம் புதுச்சேரி : சென்னை மியாட் மருத்துவமனையின், இடையீட்டு இருதயவியல் சிகிச்சை சிறப்பு நிபுணர், புதுச்சேரியில் வரும் 28ம் தேதி மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். கடலுாருக்கு, 29ம் தேதி வருகை தர உள்ளார்.சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இடையீட்டு இருதயவியல் சிகிச்சை சிறப்பு நிபுணர் விஜய் பாலாஜி, புதுச்சேரிக்கு, வரும் 28ம் தேதி வருகை தந்து, மருத்துவ

கடலுாரில் 29ம் தேதி முகாம்

புதுச்சேரி : சென்னை மியாட் மருத்துவமனையின், இடையீட்டு இருதயவியல் சிகிச்சை சிறப்பு நிபுணர், புதுச்சேரியில் வரும் 28ம் தேதி மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். கடலுாருக்கு, 29ம் தேதி வருகை தர உள்ளார்.

சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இடையீட்டு இருதயவியல் சிகிச்சை சிறப்பு நிபுணர் விஜய் பாலாஜி, புதுச்சேரிக்கு, வரும் 28ம் தேதி வருகை தந்து, மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார். மாலை 5:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை, மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். இந்த ஆலோசனை முகாம், எண்: 30/11, அம்பாள் நகர் மெயின் ரோடு, குண்டுப்பாளையம், பேட்ரிக் பள்ளி அருகில், ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள தி பாஷ் மருத்துவமனையில் நடக்கிறது.

கடலுார் கடலுாரில், வரும் 29ம் தேதி ஆற்காட் மருத்துவமனை, எண்: 30, 31, ஏ.எல்.சி. வளாகம் என்ற முகவரியில், காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை, ஆலோசனை முகாம் நடக்கிறது. மார்பு வலி அல்லது அசவுகரியம், வியர்த்தல், சோர்வு, உணர்வின்மை, தலைச்சுற்றல், கை, கால், தாடைகளில் அதிகரிக்கும் வலி, கால்களில் வீக்கம், படபடப்பு ஆகிய அறிகுறி இருப்பவர்கள் இந்த முகாமில் ஆலோசனை பெறலாம். சுவாசிப்பதில் சிரமம், இதய நோய், திடீர் இதய நோய் மரணங்கள் ஏற்பட்ட குடும்ப வரலாறு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் ஆலோசனைக்கு அணுகலாம்.மேலும் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டிக் ஸ்டெண்டிங், பைபாஸ் அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை, பேஸ்மேக்கர்கள், அன்யுரிசம் சிகிச்சை, இதய வால்வு பழுது மற்றும் மாற்றம் செய்து கொண்டவர்கள், இரண்டாவது கருத்து அல்லது வழக்கமான இதய சோதனைக்கும் முகாமில் பங்கேற்கலாம்.

முந்தைய மருத்துவ பதிவுகள் ஏதேனும் இருந்தால் அவசியம் கொண்டு வரவேண்டும். முகாமிற்கு வர முன் பதிவு அவசியம். ஆலோசனை கட்டணம்-200 ரூபாய். முன்பதிவுக்கு 7824060146, 9841268500 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X