பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றும் பணி.. தீவிரம் வேட்பாளரை தேர்வு செய்வதில் பிரதான கட்சிகள் ஆர்வம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : உள்ளாட்சித் தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பி.டி.ஓ., அலுவலகங்களில், வார்டு வாரியாக பிரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் இணையதளத்தில் பதிவேற்றும் பணி தீவிரமாக நடக்கிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில், 412 பஞ்சாயத்துகள் உள்ளன. இங்கு 19 மாவட்ட

கள்ளக்குறிச்சி : உள்ளாட்சித் தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பி.டி.ஓ., அலுவலகங்களில், வார்டு வாரியாக பிரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் இணையதளத்தில் பதிவேற்றும் பணி தீவிரமாக நடக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில், 412 பஞ்சாயத்துகள் உள்ளன. இங்கு 19 மாவட்ட கவுன்சிலர்கள், 180 ஒன்றிய கவுன்சிலர்கள், 3,162 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி முதல் கட்டமாக மாவட்டத்தில் 1,889 ஓட்டுச்சாவடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக, வாக்காளர்களை ஊராட்சி வார்டு வாரியாக பிரிக்கும் பணி நடக்கிறது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்காக தயார் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை, வருவாய்த்துறையிடமிருந்து பெற்று அதில் உள்ள வாக்காளர்கள் ஊராட்சி வார்டு வாரியாக பிரிக்கப்படுகிறது.

இப்பணி முடிந்த ஊராட்சிகளின் வாக்காளர் பட்டியல், தேர்தல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. 412 ஊராட்சிகளின் வாக்காளர் பட்டியலும் வரும் 27ம் தேதிக்குள் தேர்தல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதால் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. தொடர்ந்து தேர்தல் ஆணையம் மூலம் பாகம் வாரியாக (ஊராட்சி வார்டு) வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.அதேபோல், 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 412 ஊராட்சிகளின் மக்கள் தொகை பட்டியலும், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சி.ஆர்.டி., அலுவலகத்தில் கடந்த வாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அங்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு, சுழற்சி முறை ஆகியவற்றின் அடிப்படையில் இடஒதுக்கீடு விபரம் முடிவு செய்து, தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்படும்.இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தமிழக கெஜட்டில் இடஒதுக்கீடு விபரம் வெளியாக வாய்ப்புள்ளதாக பி.டி.ஓ., ஊழியர்கள் தெரிவித்தனர்.

கட்சியினர் தீவிரம்
கள்ளக்குறிச்சி மாவட்ட உதயத்திற்குப் பிறகு நடைபெறும் முதல் உள்ளாட்சித் தேர்தல் என்பதால், மாவட்ட மற்றும் ஒன்றிய சேர்மன் பதவியிடங்களை கைப்பற்றுவதில் தி.மு.க., - அ.தி.மு.க.,வினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக, தி.மு.க., தேர்தல் பொறுப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அமைச்சர் வேலுவின் ஆலோசனைப்படி தி.மு.க., மாவட்ட, ஒன்றிய செயலாளர்களும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு உத்தரவின் பேரில், அனைத்து ஒன்றிய செயலாளர்களும் தங்களது பகுதிக்குட்பட்ட ஊராட்சிகளுக்குச் சென்று கட்சி நிர்வாகிகளை சந்திப்பது. அதிருப்தியாளர்களை சமாதானம் செய்வது.வேட்பாளரை தேர்வு செய்வது. வெற்றி பெறுவதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது ஆகியவை குறித்து பேசி வருகின்றனர். இதுதவிர பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சியினரும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X