பொது செய்தி

தமிழ்நாடு

முகக் கவசமின்றி திரியும் நபர்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
சின்னசேலம் : சின்னசேலம் பகுதிகளில் முகக் கவசமின்றி சுற்றித்திரியும் நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் துவங்கியுள்ளதால் கொரோனா அதிகரிக்கும் அபாயம் உள்ளது.கொரோனா பரவல் 2வது அலையைக் கட்டுப்படுத்த முகக் கவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவுவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது கட்டாயம் என, மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த மூன்றையும் பின்பற்றினால்,

சின்னசேலம் : சின்னசேலம் பகுதிகளில் முகக் கவசமின்றி சுற்றித்திரியும் நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் துவங்கியுள்ளதால் கொரோனா அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

கொரோனா பரவல் 2வது அலையைக் கட்டுப்படுத்த முகக் கவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவுவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது கட்டாயம் என, மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த மூன்றையும் பின்பற்றினால், கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என, சுகாதார துறையினர் கூறியுள்ளனர்.முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கும் வகையில், அபராதம் விதிக்கும் நடைமுறையும் அமலில் உள்ளது.

இந்நிலையில், சின்னசேலம் பகுதிகளில் பொதுமக்கள் முகக் கவசம் அணிவதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர்.இதில், நகரப்பகுதிக்கு வரும் மக்கள் பெரும்பாலானோர் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை.ஒரு சிலர் அதிகாரிகளை பார்க்கும் போது மட்டும் முகக் கவசத்தை அணிந்து தப்பித்து விடுகின்றனர். இதனால் முன்பை போல் மீண்டும் கொரோனா பரவல் இப்பகுதிகளில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.எனவே, முகக் கவசமின்றி திரியும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து, அவர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X