மாவட்ட சிறப்பை எடுத்துரைக்கும் சிறந்த புகைப்படங்கள் வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட சிறப்பை எடுத்துரைக்கும் சிறந்த புகைப்படங்கள் வரவேற்பு

Added : ஆக 23, 2021
Share
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தனி சிறப்பை எடுத்துரைக்கும் சிறந்த புகைப்படம் மறறும் புகைப்படக்காரருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையையும் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ம் தேதி உலக புகைப்பட நாள்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தனி சிறப்பை எடுத்துரைக்கும் சிறந்த புகைப்படம் மறறும் புகைப்படக்காரருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையையும் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ம் தேதி உலக புகைப்பட நாள் கொண்டாடப்படுகிறது.மொழிகளைக் கடந்து மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியும், அனைவரையும் ஈர்க்க கூடிய ஆற்றலை பெற்றது புகைப்படக்கலை. அதன் படைப்பாளிகளை போற்றும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிறந்த புகைப்படம் மற்றும் புகைப்படக்காரருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

மாவட்டத்தில் உள்ள அணைகள், இயற்கை வனப்புகள், கோவில்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் உட்பட மாவட்டத்தின் தனி சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் எடுக்கப்பட்ட சிறந்த மூன்று புகைப்படங்களை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலக மின்னஞ்சலுக்கு prokallakurichi@gmail.com அனுப்ப வேண்டும்.புகைப்படத்துடன், புகைப்படக்காரர்களின் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு, வரும் 27ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். சிறந்த படமாக தேர்வு செய்யப்படும் புகைப்படத்திற்கும், புகைப்படக்காரருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X