பொது செய்தி

தமிழ்நாடு

வேர்க்கடலை, கம்பு பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுரை

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பகுதிகளில், வேர்க்கடலை மற்றும் கம்பு பயிர்களை காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலெக்டர் ஸ்ரீதர் செய்திக்குறிப்பு:இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து, பயிர் இழப்பினை ஈடு செய்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பகுதிகளில், வேர்க்கடலை மற்றும் கம்பு பயிர்களை காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலெக்டர் ஸ்ரீதர் செய்திக்குறிப்பு:இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து, பயிர் இழப்பினை ஈடு செய்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாவட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் வேர்க்கடலை மற்றும் கம்பு பயிரிட்டுள்ள விவசாயிகள், ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.காப்பீடு செய்ய ஒரு ஏக்கர் வேர்க்கடலைக்கு 532 ரூபாயும், கம்புக்கு 179 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். அரசு பொதுசேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீடு தொகை செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பதிவு செய்யும் விவசாயியின் பெயர், விலாசம், நிலப் பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விபரங்களை சரியாக அளித்து விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X