பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் முனைவோருக்கு சிறப்பு கடன் திருவிழா

Added : ஆக 23, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா, வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது.தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில், சேவை பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலை, சேவை நிறுவனம் நிறுவுவதற்கும்; தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்தி, உற்பத்தியை பன்முகப்படுத்தவும், கடனுதவி வழங்கி

திருவள்ளூர் : குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா, வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில், சேவை பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலை, சேவை நிறுவனம் நிறுவுவதற்கும்; தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்தி, உற்பத்தியை பன்முகப்படுத்தவும், கடனுதவி வழங்கி வருகிறது.திருவள்ளூர் மாவட்ட கிளை அலுவலகமான அம்பத்துார் தொழிற்பேட்டையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா, வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த வாய்ப்பை புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து, தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.மேலும் தகவலுக்கு, 044 - 26257664, 26248644 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X