பொது செய்தி

தமிழ்நாடு

சரக்கு வாகனத்தில் மக்கள் பயணம் சமூக இடைவெளி கேள்விக்குறி

Added : ஆக 23, 2021
Share
Advertisement
ஊத்துக்கோட்டை : தளர்த்தப்பட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சரக்கு வாகனத்தில் அதிகளவு மக்களை ஏற்றிச் சென்ற சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியது.கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால், தளர்த்தப்பட்ட ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. ஆனாலும், முக கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என, அறிவித்து வருகிறது.வாகனங்களில் குறிப்பிட்ட நபர்கள்
 சரக்கு வாகனத்தில் மக்கள் பயணம் சமூக இடைவெளி கேள்விக்குறி

ஊத்துக்கோட்டை : தளர்த்தப்பட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சரக்கு வாகனத்தில் அதிகளவு மக்களை ஏற்றிச் சென்ற சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால், தளர்த்தப்பட்ட ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. ஆனாலும், முக கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என, அறிவித்து வருகிறது.வாகனங்களில் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் ஏற்றிச் செல்ல வேண்டும்.

ஆனால், சரக்கு வாகனத்தில் அதிகளவு மக்களை சமூக இடைவெளி இன்றி ஏற்றிச் செல்லும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியை சுற்றி அதிகளவு கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் டிராக்டர்கள், வேன்கள், சரக்குவாகனங்களில் மக்கள்அதிகளவில் பயணிக்கின்றனர்.சரக்கு வாகனங்களில், சமூக இடைவெளி இன்றி அதிகளவு மக்கள் ஏற்றிச் சென்ற சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X