பொது செய்தி

தமிழ்நாடு

வெறிநாய் கடித்ததில் 7 வயது சிறுவன் பலி 'ரேபிஸ்' நோய் தாக்கியதால் பரிதாபம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
பூந்தமல்லி : பூந்தமல்லி அருகே, வெறிநாய் கடித்ததில் 7 வயது சிறுவன், 'ரேபிஸ்' வைரஸ் தொற்றுக்கு ஆளாகி பரிதாபமாக உயிரிழந்தான்.பூந்தமல்லி அடுத்த, அகரமேல் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள், இரண்டு மாதங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட சிறுவர்களை கடித்துள்ளன. நாய் கடிக்கு ஆளானவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்.அதே பகுதியைச் சேர்ந்த மோனிஷ், 7, என்ற சிறுவனையும், ஒன்றரை

பூந்தமல்லி : பூந்தமல்லி அருகே, வெறிநாய் கடித்ததில் 7 வயது சிறுவன், 'ரேபிஸ்' வைரஸ் தொற்றுக்கு ஆளாகி பரிதாபமாக உயிரிழந்தான்.

பூந்தமல்லி அடுத்த, அகரமேல் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள், இரண்டு மாதங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட சிறுவர்களை கடித்துள்ளன. நாய் கடிக்கு ஆளானவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்.அதே பகுதியைச் சேர்ந்த மோனிஷ், 7, என்ற சிறுவனையும், ஒன்றரை மாதத்திற்கு முன் வெறிநாய் கடித்துள்ளது.அதில் சிறுவனுக்கு, முகம் உட்பட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஆனால் அவரது பெற்றோர் தடுப்பூசி போடாமல், அலட்சியமாக விட்டதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன், மோனிஷின் நாக்கில் திடீரென நாயை போன்று எச்சில் ஊற்றியது.மேலும், தண்ணீரை பார்த்தால் ஓடுவது என, மோனிஷின் செயல்பாடு இயல்புக்கு மாறாக காணப்பட்டது. பயந்த பெற்றோர், மோனிஷை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர்.வெறிநாய் கடித்ததில் ஏற்பட்ட 'ரேபிஸ்' வைரசால் மோனிஷ் பாதிக்கப்பட்டது

தெரிந்தது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், நேற்று காலை மோனிஷ் பரிதாபமாக இறந்தான். இதைத்தொடர்ந்து, 'ரேபிஸ்' நோய் தாக்கி இறந்த சிறுவனின் எச்சில் பட்டால் மற்றவர்களுக்கும் அந்நோய் பரவும் என்பதால், சிறுவனின் பெற்றோர் மற்றும் யார், யாருடன் சிறுவன் பழகினான் என்பதை கணக்கெடுத்து, தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நிர்வாகம் அலட்சியம். பூந்தமல்லி, அகரமேல் ஊராட்சியில், வெறிநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது.

அவற்றை பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையெனில் பிடித்து செல்ல வேண்டும் என, பொதுமக்கள் அடிக்கடி கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் இன்னும் அலட்சியமாக உள்ளது.இந்நிலையில், ஏழு வயது சிறுவன் வெறிநாய் கடிக்கு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X