குன்றத்துார் பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள் அட்டகாசம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குன்றத்துார் பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள் அட்டகாசம்

Added : ஆக 23, 2021
Share
குன்றத்துார் : குன்றத்துார் பேருந்து நிலையத்தில், தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், அரசு பேருந்துகளை நிறுத்த இடமில்லாமல் போகிறது.குன்றத்துார் பேருந்து நிலையத்திலிருந்து பிராட்வே, தி.நகர், திருப்போரூர், வடபழநி, ஸ்ரீபெரும்புதுார், சோமங்கலம் போன்ற பகுதிகளுக்கு, அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.சமீப காலமாக, இந்த பேருந்து நிலையத்தை, தனியார்
 குன்றத்துார் பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள் அட்டகாசம்

குன்றத்துார் : குன்றத்துார் பேருந்து நிலையத்தில், தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், அரசு பேருந்துகளை நிறுத்த இடமில்லாமல் போகிறது.குன்றத்துார் பேருந்து நிலையத்திலிருந்து பிராட்வே, தி.நகர், திருப்போரூர், வடபழநி, ஸ்ரீபெரும்புதுார், சோமங்கலம் போன்ற பகுதிகளுக்கு, அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சமீப காலமாக, இந்த பேருந்து நிலையத்தை, தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. கார், வேன், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்களை, நிலையத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர்.இதனால், அரசு பேருந்துகளை நிறுத்த போதிய இடவசதி இல்லாமல் போகிறது. இது குறித்து, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வாகன ஆக்கிரமிப்பை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதே நிலை நீடித்தால், பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, தனியார் வாகன நிறுத்தமாக மாறிவிடும். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரசு பேருந்துகள் எளிதாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X