பொது செய்தி

தமிழ்நாடு

'கோவில் பணியாளர்களுக்கு 7வது  ஊதிய குழு வேண்டும் '

Added : ஆக 23, 2021
Share
Advertisement
திருத்தணி : 'கோவிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, 7வது ஊதியக் குழு உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என, திருத்தணியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு முதுநிலை கோவில் பணியாளர்கள் சங்க திருத்தணி கிளை சார்பில் ஆலோசனை கூட்டம், திருத்தணி முருகன் கோவில் விடுதியில் நேற்று நடந்தது.கிளை சங்க தலைவர் பாபு தலைமை வகித்தார். செயலர் அன்பழகன் வரவேற்றார், பொருளர் ரகு வரவு -

திருத்தணி : 'கோவிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, 7வது ஊதியக் குழு உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என, திருத்தணியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு முதுநிலை கோவில் பணியாளர்கள் சங்க திருத்தணி கிளை சார்பில் ஆலோசனை கூட்டம், திருத்தணி முருகன் கோவில் விடுதியில் நேற்று நடந்தது.கிளை சங்க தலைவர் பாபு தலைமை வகித்தார். செயலர் அன்பழகன் வரவேற்றார், பொருளர் ரகு வரவு - செலவு கணக்குகள் வாசித்தார்.இதில், மாநில தலைவர் ஷார்ஜ்ராவ், பொது செயலர் சுதர்சனம், பொருளர் பாலமுருகன், துணைத் தலைவர் தணிகாசலம் ஆகியோர் பேசினர்.பின் கூட்டத்தில், கோவில் பணியாளர்களுக்கு, 7வது ஊதியக் குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உட்பட மொத்தம், 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X