பொது செய்தி

தமிழ்நாடு

அவசர கோல அணுகுசாலை சேதம் போக்குவரத்துக்கு தடை விதிப்பு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
செங்குன்றம் : திறப்பு விழாவிற்காக அவசர கோலத்தில் அமைக்கப்பட்ட அணுகு சாலை, ஓரிரு நாள் மழைக்கே சேதமடைந்ததால், போக்குவரத்து தடை செய்யப்பட்டது.வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, 62 கி.மீ., துாரம் கொண்டது. சென்னை, செங்குன்றம், பாடியநல்லுார் சுங்கச்சாவடி அருகே அதன் அணுகு சாலை பணி, இந்தாண்டு ஜன., மாதம் வரை முழுமை அடையாமல் இருந்தது.இதனால் மீஞ்சூர், பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்
 அவசர கோல அணுகுசாலை சேதம் போக்குவரத்துக்கு தடை விதிப்பு

செங்குன்றம் : திறப்பு விழாவிற்காக அவசர கோலத்தில் அமைக்கப்பட்ட அணுகு சாலை, ஓரிரு நாள் மழைக்கே சேதமடைந்ததால், போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, 62 கி.மீ., துாரம் கொண்டது. சென்னை, செங்குன்றம், பாடியநல்லுார் சுங்கச்சாவடி அருகே அதன் அணுகு சாலை பணி, இந்தாண்டு ஜன., மாதம் வரை முழுமை அடையாமல் இருந்தது.இதனால் மீஞ்சூர், பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் சென்னைக்கு வந்து செல்லும் வாகனங்கள் செங்குன்றம் வழியாக சென்று வந்தன.

மேற்கண்ட பிரச்னை யால் ஒரே நேரத்தில், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் செங்குன்றம், திருவள்ளூர் கூட்டுச்சாலையில் சிக்கி, போக்குவரத்து நெரிசல் தொடர்ந்தது.இந்நிலையில், இரண்டாம் கட்ட பணியின் தொடர்ச்சியாக கடந்த பிப்., மாதம், 8ம் தேதி, பணி முடிந்த பகுதியை, அன்றைய தமிழக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.இதனால், திருவள்ளூர் கூட்டுச்சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது. கடந்த சில தினங்களாக, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் பெய்த மழை காரணமாக, பாடியநல்லுார் சுங்கச்சாவடி அருகே, வண்டலுார் -மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் இரு பக்கத்திலும் உள்ள அணுகு சாலைகள் சேதமடைந்தன.சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் திறப்பு விழாவிற்காக, அவசர கோலத்தில் அமைக்கப்பட்ட சாலையின் நிலை வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, கடந்த சில தினங்களாக, ஒரு பக்க அணுகு சாலை, 3 கி.மீ., துாரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

அதனால், மற்றொரு பக்கம் சேதமடைந்த அணுகு சாலையில் சென்று வரும் அனைத்து வாகனங்களும், இடநெருக்கடியால் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த சாலையை தரமாக சீரமைத்து, வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கைவலுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X