பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.கே.பேட்டை வயல்வெளிகளில் மணக்கிறது 'வெல்லப் பாகு'

Added : ஆக 23, 2021
Share
Advertisement
ஆர்.கே.பேட்டை : பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் வெல்லம் தயாரிப்பு பணிகள், தற்போது ஆர்.கே.பேட்டை பகுதிகளில் துவங்கியுள்ளன.இதன் காரணமாக, வயல்வெளிகளின் எல்லா திசையிகளிலும் வெல்லப்பாகு வாசம் மணக்கிறது. வரும் தீபாவளி வரை இது தொடரும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.ஆர்.கே.பேட்டை சுற்றுப் பகுதியில் கரும்பு அதிகளவில் பயிரிடப்படுகிறது. கடந்த நுாற்றாண்டில் முழுக்க முழுக்க
 ஆர்.கே.பேட்டை வயல்வெளிகளில் மணக்கிறது 'வெல்லப் பாகு'

ஆர்.கே.பேட்டை : பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் வெல்லம் தயாரிப்பு பணிகள், தற்போது ஆர்.கே.பேட்டை பகுதிகளில் துவங்கியுள்ளன.இதன் காரணமாக, வயல்வெளிகளின் எல்லா திசையிகளிலும் வெல்லப்பாகு வாசம் மணக்கிறது.

வரும் தீபாவளி வரை இது தொடரும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.ஆர்.கே.பேட்டை சுற்றுப் பகுதியில் கரும்பு அதிகளவில் பயிரிடப்படுகிறது. கடந்த நுாற்றாண்டில் முழுக்க முழுக்க வெல்லம் தயாரிப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்.தற்போது, வேலைஆட்கள் தட்டுப்பாடு காரணமாக சர்க்கரை ஆலைகளுக்கு, கரும்புகள் வெட்டி அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஆனாலும், ஆர்.கே.பேட்டை அடுத்த ஜனக ராஜகுப்பம், கதனநகரம், தியாகபுரம், ஆனந்தவல்லிபுரம், சந்திரவிலாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் இன்றும் வெல்லம் தயாரிக்கப்படுகிறது.வியாபாரிகள் தங்களிடம் வந்து நேரடியாக கொள்முதல் செய்வர் என, வெல்லம் தயாரிக்கும் விவசாயிகள் கூறுகின்றனர்.ஓராண்டு கால வளர்ச்சி கொண்ட கரும்பு அறுவடை தற்போது துவங்கியுள்ளது. கதனநகரம், ஜனகராஜகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் முதல் கட்ட அறுவடையும், அறுவடை செய்யப்பட்ட கரும்பில் இருந்து வெல்லம் தயாரிப்பும் நடந்து வருகிறது.

வயல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள ஆலைகளில் குடில் அமைத்து வெல்லம் தயாரிக்கும் பணியில், விவசாயிகள் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.கரும்புச் சாறு காய்ச்சி, பாகு பக்குவத்தில் கலனில் ஊற்றப்படுகிறது. இதமான சூட்டில் வெல்லம் உருண்டைகளாக பிடிக்கப்படுகின்றன.இதன் காரணமாக, வயல்வெளிகளின் சுற்றுப்பகுதி எங்கும் வெல்லப்பாகு வாசம் மணக்கிறது. தற்போது துவங்கியுள்ள இந்த பணி, வரும் தீபாவளி பண்டிகை வரை தொடரும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X