பொது செய்தி

இந்தியா

கோசாலை அமைக்க இடம் கிடைக்காமல் அரசு திண்டாட்டம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
பெங்களூரு : திட்டமிட்டபடி கோசாலை அமைக்க, இடம் கிடைக்காமல், கர்நாடக அரசு திண்டாடுகிறது. பல மாவட்டங்களில், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது அல்லது மற்ற நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.கர்நாடகாவில், பசுவதை தடைச்சட்டம் அமலுக்கு வந்த பின், பசுக்களை பாதுகாக்க, கோசாலைகள் திறப்பதில், அரசு ஆர்வம் காண்பிக்கிறது.இதற்கு முன் எடியூரப்பா அமைச்சரவையில், கால்நடைத்துறை

பெங்களூரு : திட்டமிட்டபடி கோசாலை அமைக்க, இடம் கிடைக்காமல், கர்நாடக அரசு திண்டாடுகிறது.

பல மாவட்டங்களில், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது அல்லது மற்ற நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.கர்நாடகாவில், பசுவதை தடைச்சட்டம் அமலுக்கு வந்த பின், பசுக்களை பாதுகாக்க, கோசாலைகள் திறப்பதில், அரசு ஆர்வம் காண்பிக்கிறது.இதற்கு முன் எடியூரப்பா அமைச்சரவையில், கால்நடைத்துறை அமைச்சராக இருந்த பிரபு சவுஹான், அரசு சார்பில் ஒவ்வொரு தாலுகாவிலும், தலா இரண்டு கோசாலைகள் திறப்பதாக அறிவித்தார்.

இப்போது பசவராஜ் பொம்மை அரசிலும், அதே பொறுப்பை ஏற்றுள்ள பிரபு சவுஹான், கோசாலைகள் திறக்க ஆர்வம் காண்பிக்கிறார்.ஆனால் இதற்கு தேவையான நிலம் கிடைக்கவில்லை. மாவட்டத்துக்கு தலா ஒரு கோசாலை அமைக்கவும் இடம் கிடைக்கவில்லை.அமைச்சர் கூறியதாவது:கோசாலை அமைக்க, குறைந்தபட்சம் 50 முதல் 100 ஏக்கர் நிலம் தேவைப்படும்.

ஐந்து முதல், 15 மாவட்டங்களில், இடம் கிடைக்கக்கூடும். பெரும்பாலான மாவட்டங்களில், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது அல்லது வேறு நோக்கத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து மாவட்டங்களிலும், கோசாலைகளை அமைப்பதில், அரசு உறுதியாகவுள்ளது. பல கோசாலைகள், அக்டோபர் 2 க்குள் திறக்கப்படும். கோசாலை அமைப்பதற்காக, வருவாய்த்துறை நிலம் வழங்குவதாக நம்பிக்கையளித்துள்ளது .இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X