பொது செய்தி

இந்தியா

இறக்குமதி பாதிப்பால் உலர்ந்த பழங்கள் விலை 'கிடுகிடு'

Added : ஆக 23, 2021
Share
Advertisement
பெங்களூரு : தலிபான்களின் அட்டகாசத்தால், ஆப்கானிஸ்தான் தத்தளிக்கிறது இதன் விளைவாக கர்நாடகாவில், உலர்ந்த பழங்களின் இறக்குமதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றின் விலையும் 'கிடுகிடு' என அதிகரித்துள்ளது.கோவா, மங்களூரிலிருந்து முந்திரிப்பருப்பு; மஹாராஷ்டிராவிலிருந்து திராட்சை; ஈரானிலிருந்து பிஸ்தா; கலிபோர்னியாவிலிந்து பாதாம்; காஷ்மீரிலிருந்து வால்நட் போன்ற

பெங்களூரு : தலிபான்களின் அட்டகாசத்தால், ஆப்கானிஸ்தான் தத்தளிக்கிறது இதன் விளைவாக கர்நாடகாவில், உலர்ந்த பழங்களின் இறக்குமதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றின் விலையும் 'கிடுகிடு' என அதிகரித்துள்ளது.

கோவா, மங்களூரிலிருந்து முந்திரிப்பருப்பு; மஹாராஷ்டிராவிலிருந்து திராட்சை; ஈரானிலிருந்து பிஸ்தா; கலிபோர்னியாவிலிந்து பாதாம்; காஷ்மீரிலிருந்து வால்நட் போன்ற உலர்ந்த பழங்கள், பெங்களூருக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.ஆனால் ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் உலர்ந்த பழங்கள், மிக அதிகமான ஊட்டச்சத்து அம்சங்கள் அடங்கியதாகும்.இவற்றின் விலையும் அதிகம்.ஆப்கானிஸ்தானின் உலர்ந்த பழங்களின் விலை அதிகம் என்றாலும், இவற்றில் ஆரோக்கியத்துக்கு தேவையான, மருத்துவ குணங்கள்; ரத்தத்தை சுத்தம் செய்ய, உடலை குளிர்ச்சியாக வைப்பது;புற்றுநோயை கட்டுப்படுத்துவது; முதுமையை தடுப்பது; நீரிழிவு, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது என, பல வகைகளில் பயனளிக்கிறது.

இதனால் அந்நாட்டு உலர்ந்த பழங்களுக்கு, 'டிமாண்ட்' அதிகம்.குறிப்பாக கொரோனா பரவ துவங்கிய பின், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள, பலரும் அவைகளை வாங்கினர். விற்பனையும் அமோகமாக இருந்தது.ஆப்கானிஸ்தானிலிருந்து, பெங்களூருக்கு மாதந்தோறும் 200 டன் வந்தது. ஆனால் ஆப்கானிஸ்தான், தலிபான் வசமான பின், கர்நாடகாவுக்கு இறக்குமதி நின்றுள்ளது. இதனால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.சூழ்நிலையை லாபமாக பயன்படுத்தும் இடைத்தரகர்கள், அவைகளை, பதுக்கி வைத்துள்ளனர்.

பற்றாக்குறைக்கு இதுவும் ஒரு காரணம்.இதன் விளைவாக விலை அதிகரித்துள்ளது.பொதுவாக தீபாவளி நேரத்தில், உலர் பழங்கள் தேவை, பயன்பாடு அதிகமிருக்கும். ஆனால் இம்முறை ஆப்கானிஸ்தானிலிருந்து, இறக்குமதி ஆகாததால், தீபாவளிக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என கருதப்படுகிறது.பெங்களூரின் வியாபாரியொருவர் கூறியதாவது:உலகின் எந்தெந்த பகுதிகளில், பேரீச்சை, உலர் பழங்கள் கிடைக்கிறதோ, அங்கிருந்து இறக்குமதி செய்து கொள்வோம். 1927 லிருந்து நாங்கள், உலர் பழங்கள் வியாபாரம் செய்கிறோம். ஆண்டின் 365 நாட்களும் விற்பனை நடக்கிறது.தீபாவளி, ரம்ஜான் நேரத்தில் உலர் பழங்கள் விற்பனை, மேலும் அதிகமாக இருக்கும். குறிப்பாக வி.ஐ.பி.,க்கள் பெருமளவில் வாங்குவர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X