பொது செய்தி

இந்தியா

கோகர்ணா கடற்கரைகளில் சுழல்கள் சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை

Added : ஆக 23, 2021
Share
Advertisement
உத்தரகன்னடா : கார்வாரின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கோகர்ணாவின் இரண்டு கடற்கரைகள், மிகவும் அபாயகரமானவை. இக்கடற்கரைகளில் சுழல்கள் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக, உத்தரகன்னட மாவட்ட போலீஸ் எஸ்.பி., சிவபிரகாஷ் தேவராஜூ நேற்று கூறியதாவது:கோகர்ணாவின் 'ஓம்' கடற்கரை உட்பட, இரண்டு கடற்கரைகளில், அபாயகரமான சுழல்கள் உள்ளது. இவ்விஷயம் மங்களூரின் தனியார்

உத்தரகன்னடா : கார்வாரின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கோகர்ணாவின் இரண்டு கடற்கரைகள், மிகவும் அபாயகரமானவை.

இக்கடற்கரைகளில் சுழல்கள் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக, உத்தரகன்னட மாவட்ட போலீஸ் எஸ்.பி., சிவபிரகாஷ் தேவராஜூ நேற்று கூறியதாவது:கோகர்ணாவின் 'ஓம்' கடற்கரை உட்பட, இரண்டு கடற்கரைகளில், அபாயகரமான சுழல்கள் உள்ளது. இவ்விஷயம் மங்களூரின் தனியார் நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.சுழல் ஐந்து நொடிகளில், 100 மீட்டர் அளவில், கடலுக்குள் இழுத்து சென்று விடும். கடலில் ராட்சத அலைகள் பாய்ந்து வருகிறது.

இது மிகவும் ஆபத்தானது.நீச்சல் தெரிந்தவர்கள் கூட அபாயத்தில் சிக்கும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணியர் மிகவு ம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இரண்டு கடற்கரைகளிலும், போலீஸ்துறை சார்பில் ஊழியர்கள், ஊர்க்காவல் படைகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அபாயமான இடத்துக்கு செல்லக்கூடாது என, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. கடற்கரைகளில் நீச்சல் வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் கூட சுற்றுலா பயணியர் கவனமாக இருப்பது நல்லது.

கடற்கரைகளில் அசம்பாவிதங்களை கட்டுப்படுத்துவது பற்றி, போலீஸ் துறை சார்பில், மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.சுற்றுலாத்துறை, போலீஸ்துறை ஒருங்கிணைப்பில் அசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X