பொது செய்தி

இந்தியா

பூக்கள் விற்பனை செய்ய விசாலமான மார்க்கெட்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
பெங்களூரு : தாங்கள் விளைவிக்கும் பூக்களை, விவசாயிகள் விற்பனை செய்ய பெங்களூரில் விசாலமான மார்க்கெட் கட்டித்தர, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஹெப்பாலில் 10 ஏக்கர் நிலத்தை தோட்டக்கலைத்துறையிடம் ஒப்படைத்து உத்தரவு வெளியிட்டுஉள்ளது.கர்நாடக விவசாயிகள், பயிரிடும் பூக்களை விற்பனை செய்ய, சரியான மார்க்கெட் வசதி இருக்கவில்லை. கே.ஆர்.மார்க்கெட்டில், போதிய இட

பெங்களூரு : தாங்கள் விளைவிக்கும் பூக்களை, விவசாயிகள் விற்பனை செய்ய பெங்களூரில் விசாலமான மார்க்கெட் கட்டித்தர, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக ஹெப்பாலில் 10 ஏக்கர் நிலத்தை தோட்டக்கலைத்துறையிடம் ஒப்படைத்து உத்தரவு வெளியிட்டுஉள்ளது.கர்நாடக விவசாயிகள், பயிரிடும் பூக்களை விற்பனை செய்ய, சரியான மார்க்கெட் வசதி இருக்கவில்லை. கே.ஆர்.மார்க்கெட்டில், போதிய இட வசதியில்லாமல், நெருக்கடியுடன் பூ மார்க்கெட் செயல்பட்டது.எனவே பூ விவசாயிகளுக்கு மார்க்கெட் வசதி செய்யும்படி, விவசாயிகள், விற்பனையாளர்கள் சங்கம், பல முறை அரசிடம் கோரிக்கை விடுத்ததுபல ஆண்டுகள் கோரிக்கையை நிறைவேற்றிய அரசு, பெங்களூரின் ஹெப்பால் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான இடத்தில், 10 ஏக்கர் இடத்தை தோட்டக்கலைத்துறைக்கு, ஒப்பந்த அடிப்படையில் வழங்கி, அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த இடத்தில் பூக்கள் விற்பனை செய்ய, விசாலமான மார்க்கெட் கட்டப்படும்.தென் மாநிலங்களின் பூ விவசாயிகள் சங்கத்தலைவர் அரவிந்த் ஹர்ஷா கூறியதாவது:மாநில அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. சரியான மார்க்கெட் வசதியில்லாமல், பூ விவசாயிகள் பரிதவித்தனர். இவர்கள், அனைத்து பருவ காலங்களிலும், செயல்பட அனுகூலமாகும் வகையில், அனைத்து வசதிகளும் பூ மார்க்கெட்டில் இருக்கும்இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X