பொது செய்தி

இந்தியா

மைசூரு ரயில் அருங்காட்சியக வளாகத்தில் 'போட்டோ ஷூட்' நடத்த அனுமதி கட்டாயம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
மைசூரு : மைசூரு ரயில் அருங்காட்சியக வளாகத்தில், 'போட்டோ ஷூட்' நடத்த அனுமதியளிக்கப்படுகிறது. முன் கூட்டியே அனுமதி பெறுவது கட்டாயம்.தென்மேற்கு ரயில்வே மைசூரு பிரிவு பொது தொடர்பு அதிகாரி மஞ்சுநாத் கனமடி வெளியிட்ட அறிக்கை:மைசூரு ரயில் அருங்காட்சியக வளாகத்தில், 'போட்டோ ஷூட்' நடத்த வாய்ப்பளிக்கப்படுகிறது.இங்கு வரும் பொது மக்கள், சுற்றுலா பயணியர் 'போட்டோ ஷூட்'

மைசூரு : மைசூரு ரயில் அருங்காட்சியக வளாகத்தில், 'போட்டோ ஷூட்' நடத்த அனுமதியளிக்கப்படுகிறது.

முன் கூட்டியே அனுமதி பெறுவது கட்டாயம்.தென்மேற்கு ரயில்வே மைசூரு பிரிவு பொது தொடர்பு அதிகாரி மஞ்சுநாத் கனமடி வெளியிட்ட அறிக்கை:மைசூரு ரயில் அருங்காட்சியக வளாகத்தில், 'போட்டோ ஷூட்' நடத்த வாய்ப்பளிக்கப்படுகிறது.இங்கு வரும் பொது மக்கள், சுற்றுலா பயணியர் 'போட்டோ ஷூட்' நடத்த விரும்பினால்,

முன் கூட்டியே நிர்ணயித்த கட்டணம் செலுத்தி, அனுமதி பெற்று டிஜிட்டல் உட்பட, மற்ற கேமராக்கள் பயன்படுத்தி போட்டோ எடுக்கலாம்.புதிய விதிமுறை, இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு வாரம் செவ்வாய் அன்று அருங்காட்சியகத்துக்கு விடுமுறை நாள்.பார்வையாளர்களுக்கு அனுமதியிருக்காது. ஆனால் முன்பே அனுமதி பெற்றுள்ளவர்களுக்கு, அன்றைய தினம் சிறப்பு விளக்குகள் பயன்படுத்தி, போட்டோ, வீடியோகிராபி எடுக்க அனுமதியளிக்கப்படும்

.இது குறித்து அருங்காட்சியகத்தின், வரவேற்பு மையத்தில் தகவல் பெறலாம்.நவீனப்படுத்தப்பட்ட ரயில் அருங்காட்சியகம், 2020 மார்ச்சிலிருந்து, பொது மக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டது.இங்கு கேமரா பயன்படுத்தி போட்டோ எடுக்க அனுமதியளிக்கும்படி, கோரிக்கை வலுத்தது. சாதகம், பாதகங்களை ஆய்வு செய்து, அனுமதியளிக்க முடிவு செய்யப்பட்டது.இந்த வாய்ப்பை பொதுமக்கள், சுற்றுலா பயணியர் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X