பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்' என, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் காந்திநாதன் தெரிவித்தார்.அவர் தெரிவித்தது: இப்பயிற்சியில் சேர 12 ம் வகுப்பு தேர்ச்சி, 17 வயது பூர்த்தியாயிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு முன்னுரிமை

திண்டுக்கல் : 'முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்' என, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் காந்திநாதன் தெரிவித்தார்.

அவர் தெரிவித்தது: இப்பயிற்சியில் சேர 12 ம் வகுப்பு தேர்ச்சி, 17 வயது பூர்த்தியாயிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சி கட்டணம் ரூ.14 ஆயிரத்து 850.தேர்ச்சி பெறுவோருக்கு கூட்டுறவு பட்டய பயிற்சி சான்றிதழ், நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சி மற்றும் கணினி பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் வேலை வாய்ப்பு பெறலாம்.

விருப்பமுள்ளவர்கள் www.tncu.tn.gov.in விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலைய முகவரிக்கு பதிவு தபாலில் செப்.15 க்குள் அனுப்பலாம். விபரங்களுக்கு 9994635297 ல் பேசலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X