மணப்பாறை அருகே கார் தீப்பற்றி டிரைவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணப்பாறை அருகே கார் தீப்பற்றி டிரைவர் பலி

Added : ஆக 23, 2021
Share
திருச்சி : மணப்பாறை அருகே கார் தீப்பற்றி எரிந்ததில் டிரைவர் உடல் கருகி உயிரிழந்தார்.திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து திருச்சிக்கு நேற்று காலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. டிரைவர் மட்டும் ஓட்டி சென்றார்.காலை 8:00 மணிக்கு சித்தாநத்தம் பிரிவு ரோடு அருகே சென்றபோது திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. அங்குள்ளவர்கள் பார்த்து அருகில் செல்ல முயன்றபோது தீ வேகமாக

திருச்சி : மணப்பாறை அருகே கார் தீப்பற்றி எரிந்ததில் டிரைவர் உடல் கருகி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து திருச்சிக்கு நேற்று காலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. டிரைவர் மட்டும் ஓட்டி சென்றார்.காலை 8:00 மணிக்கு சித்தாநத்தம் பிரிவு ரோடு அருகே சென்றபோது திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. அங்குள்ளவர்கள் பார்த்து அருகில் செல்ல முயன்றபோது தீ வேகமாக எரிய ஆரம்பித்தது. காரை ஓட்டி வந்த நபரும் தீயில் சிக்கினார்.தகவலறிந்து அங்கு வந்த மணப்பாறை தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் தீயை போராடி அணைத்தனர்.

அதற்குள் கார் முழுதும் எரிந்தது. டிரைவர் சீட்டில் உட்கார்ந்த நிலையில் கருகி இறந்து கிடந்தார். விசாரணையில் திருச்சி தென்னுார் பகுதியைச் சேர்ந்த நாராயணன் 35, என்பதும் சொந்த காரை வாடகைக்கு ஓட்டி வந்தவர் நேற்று முன்தினம் இரவு மதுரைக்கு சவாரி சென்றதும் தெரிந்தது.மதுரையில் இருந்து நள்ளிரவில் மணப்பாறை வந்த அவர் அங்கு காரை நிறுத்தி துாங்கி விட்டு நேற்று காலை திருச்சிக்கு கிளம்பி உள்ளார். நாராயணனுக்கு திருமணம் ஆகி மனைவி ஒரு குழந்தை உள்ளது.கார் விபத்தில் சிக்கி எரிந்ததா அல்லது யாரேனும் எரித்து நாராயணணை கொலை செய்தனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X