சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடை மீறி ஏற்காடு சென்ற சுற்றுலா வேன் விபத்தில் சிக்கி ஒருவர் பலி; ௧௪ பேர் காயம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
ஏற்காடு : ஏற்காட்டுக்கு தடை மீறி சுற்றுலா வேன் சென்ற நிலையில், விபத்தில் சிக்கியதில், ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.சேலம் மாவட்டம், ஏற்காடுக்கு, புதுச்சேரியில் இருந்து, 17 பேர், சுற்றுலா வேனில் நேற்று காலை வந்தனர். ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு, குப்பனுார் மலைப்பாதை வழியாக திரும்பினர்.வாழவந்தி, ராமர் கோவில் அருகே சென்றபோது, எதிரே டூவீலர் வந்ததால்,

ஏற்காடு : ஏற்காட்டுக்கு தடை மீறி சுற்றுலா வேன் சென்ற நிலையில், விபத்தில் சிக்கியதில், ஒருவர் உயிரிழந்தார்.

14 பேர் படுகாயம் அடைந்தனர்.சேலம் மாவட்டம், ஏற்காடுக்கு, புதுச்சேரியில் இருந்து, 17 பேர், சுற்றுலா வேனில் நேற்று காலை வந்தனர். ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு, குப்பனுார் மலைப்பாதை வழியாக திரும்பினர்.வாழவந்தி, ராமர் கோவில் அருகே சென்றபோது, எதிரே டூவீலர் வந்ததால், வேன் டிரைவர் முத்துக்குமார் வாகனத்தை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது.

இதில் கடலுாரை சேர்ந்த ரமேஷ், 25, வேன் அடியில் சிக்கி, சம்பவ இடத்தில் பலியானார். அத்துடன் வேனில் இருந்த, 14 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து, ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.கண்காணிப்பில் 'கோட்டை'ஏற்காட்டுக்கு சனி, ஞாயிறில் சுற்றுலா பயணியர் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போலீசாரை மீறி, ஏற்காட்டுக்கு வேன் சென்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் கோட்டை விட்டனரா அல்லது வசூல் வேட்டையில் ஈடுபட்டு, வேனை அனுப்பினரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X